பொருளாதாரம் ஏன்கீழே புவி ஈர்ப்பு விசையால்தான்..!

ஆட்டோமொபைல் துறை சரிவு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம் இணையத்தில் பெரிய வைரலாகி உள்ளது. இணையம் முழுக்க பலர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக டிவிட் செய்து வருகிறார்கள். கடந்த சில வாரங்களாக இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் பெரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. அசோக் லேலாண்ட், மாருதி உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் ஆட்டோமொபைல் துறையில் சரிவு ஏற்பட்டது என்று என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். அவரின் பேட்டி பெரிய சர்ச்சை ஆகியுள்ளது. தற்போதைய இளைஞர்கள் மற்றும் மக்கள் மத்தியில் வாகனம் வாங்கும் ஆசை குறைந்துள்ளது. பொதுவாக இளைஞர்கள் இப்போது இஎம்ஐ கட்ட விரும்புவதில்லை . அதற்கு பதிலாக அவர்கள் ஓலா, உபரில் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். அதேபோல் பலர் தற்போது மெட்ரோவை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதனால் வாகனங்கள் வாங்குவது குறைந்துள்ளது. இதுதான் சரிவிற்கு காரணம் என்று இவர் கூறியுள்ளார்.இந்த நிலையில் நிர்மலா சீதாராமனின் கருத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளனர். என்ன நிர்மலா சீதாராமன் இப்படி எல்லாம் பேசுகிறார். அவருக்கு பொருளாதாரம் குறித்து தெரியுமா, என்று கேள்வி கேட்டு கலாய்க்க தொடங்கி இருக்கிறார்கள். ஆகவே மக்களே பொருளாதாரம் ஏன் கீழே போகுது தெரியுமா? பண மதிப்பு ஏன் கீழ போகுது தெரியுமா?... புவி ஈர்ப்பு விசையால்தான், என்று இவர் கூறியுள்ளார்.நிர்மலா சீதாராமன் இப்படித்தான் இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிமிர்த்திக் கொண்டு இருக்கிறார்.ஓலா, உபர் மூலம் உருவாகும் வேலை வாய்ப்பை வைத்து வேலைவாய்ப்பை உருவாக்கிவிட்டோம் என்று கணக்கு காட்டுவீர்கள். தற்போது அதே ஓலா, உபரை ஆட்டோமொபைல் சரிவிற்கு காரணமாக கூறுவீர்களா? என்று இவர் கேட்டுள்ளார்.- நல்லவேளை இந்த பிரச்சனைக்கு இவர்கள் நேருவை காரணமாக சொல்லவில்லை , என்று இவர் கூறியுள்ளார்.


                                                                                                                         -MMH


Comments