மகளிர் குழு என்னும் பெயரில் கந்து வட்டி கும்பல்

மகளிர் குழு என்னும் பெயரில், கந்து வட்டி கும்பலிடம் சிக்கி தடம் மாறும் குடும்ப பெண்கள்.... கந்துவட்டியா மிஞ்சும் மகளிர் குழுக்கள் கதறும் ஏழை மக்கள் வேலை இல்லாமல் இருக்கும் போது தான் அடிப்படை தேவைக்கு கடன் வாங்கி பூர்த்தி செய்வது வாடிக்கைதான். அப்படிப்பட்ட நேரத்தில் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் உறவினர்கள் மேலும் நண்பர்கள் என தொடரும் சுற்று வட்டார பகுதியில் பணம் வங்குவர்கள். இவர்களிடம் பணம் பெறுவதில் சிக்கல் ஏற்படும் போது குறைந்த அளவு வட்டிக்கு கடன் கொடுப்பவர்களிடம் கை ஏந்தும் நிலை ஏற்படும் அவர்களிடம் உடனடியாக கடன் தொகையைப் பெற்று விட முடியாது. ஏதாவது ஒரு காரணம் காட்டி கால தாமதம் செய்வர்கள்.. அப்படிப்பட்ட நேரத்தில் வட்டி எவ்வளவு இருந்தலும் அதை பொருப்படுத்தமல் வங்க தயாராக இருக்கும் போது பணத்தை தேடி அலைமேதுவர்கள்... பின்பு வீடு தேடி வரும் கந்துவட்டி, வார வட்டி, மீட்டர் வட்டி என தொடரும் ஒன்றில் பணம் வங்கி வட்டி கட்டமுடியாமல் தினறி வருவர்கள் கடன் கெடுத்தவர் அனுதினமும் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டு இருக்கும் பட்சத்தில் பணத்தை திருப்பி செலுத்திவடுவர்கள். தவறும் நிலையில் உயிரை மாய்த்து கொண்டுவர்களும் உண்டு... இது ஒரு பக்கம் விரைவில் உயிரை கொல்லும் விஷம். மகளிர் சுய குழுக்கள் வங்கிகள் மட்டும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கி வந்தபோது குழுக்களில் பிரச்சினை இல்லை . இதில் தனியார் நிதி நிறுவனங்கள் நுழைந்து பின்னர் தான் மகளிர் ஒருவருக்கு ஒருவர் தெரியாமலும் கணவர்க்கு தயார் தகப்பனார் தெரியாமலும் அனைத்து தனியார் குழுக்களில் கடன் வாங்கிவிட்டு பின்னர் அதைத் திருப்பி செலுத்த அவஸ்தைப்படும் பெண்கள் ஏராளம்... சில தனியார் நிதி நிறுவனங்கள் மகளிர் குழு என 10 பெண்களை ஒருங்கிணைத்து முதலில் தலா 20,000 ரூபாய் கடனாக வழங்கப்படுகிறது அந்த தொகை 52 வாரத்திற்க்கு அசலும் வட்டியும் சேர்த்து வாரம் ரூ625 கட்ட வைக்கிறார்கள் (52x625=32,500) (அசல் 20,000+12,500 வட்டி) 10 பேரில் யாரவது ஒருவர் வீட்டில் சாவு விழுந்து இருந்தால் கூட அவர் பணம் கட்ட வேண்டும். இல்லையெனில் மீதம் உள்ள 9 பேரும் அந்த ஒருவர் பணத்தை சேர்த்து கட்ட வேண்டும், இது துவக்கம். 20,000 கட்டி முடித்த உடன் 40,000 என கடன் தொகை அதிகரிக்கப்படுகிறது... 40,000 த்திற்க்கு அசலும் வட்டியும் சேர்த்து 2 வருடங்களுக்கு வாரம் 490 வீதம் கட்ட வேண்டும்.... ஒரு நாளைக்கு 100, 150 ரூபாய்க்கு கூலிக்கு வேலை செய்யும் பெண் வாரம்600 ரூபாய் கடன் கட்ட நிர்பந்திக்கப்படுகிறார்... கணவன் மனைவி 2 பேரும் வேலைக்கு செல்லும் குடும்பத்தில் இது பெரிய பாரம் இல்லை... ஆனால், கணவனை இழந்த, (கணவன் இருந்தும் இல்லாத) குழந்தைகளை வளர்த்து வரும் பெண்களால் வாரம் ரூ 600 எப்படி கட்ட முடியும்...??? வேலை இல்லாத வாரங்களிலும் பண்டிகை, விடுமுறை வாரங்களிலும் கூட கட்டாயம் பணம் கட்டியே ஆக வேண்டும். (கந்து வட்டிக்காரன் கூட வேலையில்லை அடுத்த வாரம் தருகிறேன் என்றால் போய் விடுவான்) இதனால் குழுவுக்கு பணம் கட்ட வேண்டும், என்று அக்கம் பக்கம் உள்ளவர்களிடமும், தெரிந்தவர்களிடமும் கடன் வாங்குகிறார்கள். ஏற்கனவே வாங்கிய கடனுடன் இந்த கடனும் சேர்வதால், வேறு 10 பெண்களுடன் சேர்ந்து வேறு நிதி நிறுவனத்தில் குழு கடன் பெறுகிறார். எனக்கு தெரிந்த வரையில் 2,3 நிதி நிறுவனங்களில் 20,000, 40,000. என 1 லட்சம் வரை ஒரு பெண் கடன் பெறுகிறாள். வாங்கிய கடனுக்கு.. 1வாரத்திற்க்கு1 குழுவிற்க்கு ரூ 600 வீதம். 3 குழுவிற்க்கு 1,800 முதல் 2,000 ரூபாய் வரை ஒரு பெண் கடன் கட்ட வேண்டிய கட்டாயத்திற்க்கு ஆளக்கப் பட்டுள்ளார்கள். விசைத்தறி கூலி வேலை செய்யும் ஒரு பெண் வாரம் ரூ 2,000 எப்படி கட்ட முடியும்..??? குழு பணம் கட்ட வேண்டும் என்று பெண்கள் வீடு வீடாக சென்று பிச்சை எடுக்காத குறையாகவும்... பிச்சை எடுத்தும் பணம் கட்டுகிறார்கள்... பணம் கட்டவில்லை என்றால் மற்ற 9 பெண்களும் சேர்ந்து அந்த பெண்ணின் வீட்டிற்க்கு சென்று கண்டபடி திட்டுகிறார்கள்... (மேலே கூறியுள்ளவை அனைத்தும் நம் அக்கம் பக்கத்து வீடுகளில் அன்றாடம் நடைபெறும் சம்பவங்கள்....) எத்தனை நாளைக்கு இப்படி அடுத்தவர்களிடம் பிச்சை எடுப்பது, திட்டுவாங்குவது என நினைத்து விரக்தியில் இருக்கும் பெண்கள், எடுக்கும் முடிவு விபரீதமாக மாறுகிறது... அந்த பெண்ணுக்கு நாள் ஒன்றுக்கு கடன் கட்ட ரூ500 தேவைப்படுகிறது (சில பெண்கள் தற்கொலை செய்ய துணிகிறார்கள், சிலர் குழந்தைகளுக்காக தடம் மாற துணிகிறார்கள்...) அந்த குழுவில் உள்ள10 பெண்களில் ஒருவர், அல்லது வேறு யாராவது ஒரு பெண் அவளுக்கு தவறான வழி காட்டுகிறார்கள். ஆம் அவள் பணத்திற்க்காக தன்னையே விற்க்க துணிகிறாள். தவறான வழியில் பணம் சம்பாதிக்க தன்னை தயார் படுத்தி கொண்டு.... தடம் மாறுகிறாள்... மேலே கூறியுள்ளவைகள் அனைத்தும் நம்மை சுற்றி தினமும் நடக்கும் உண்மையே. யாரையும் தவறாக சித்தரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கூறவில்லை .... நம் ஊரில், நம் கண்முன்னேலேயே பல பெண்கள் தவறான பாதைக்கு சென்று கொண்டுள்ளார்கள்... இந்த அவலம் நாள் தோறும் அதிகரித்துக்கொண்டே உள்ளது... நமது பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நம் பெண்கள் காப்பற்ற வேண்டும்.


-M.சுரேஷ்குமார்


நிருபர்


பொள்ளாச்சி


Comments