கோவை

கழிவு நீரை அகற்றும் ரோபோ நம்வீட்டிலோதெருக்களிலோ கழிவு நீர் கால்வாய்கள் அடைத்துக்கொண்டால்கார்பேரேஷன் கழிவுநீர் அகற்றும் ஊழியர்களை அழைத்து அதை சரி செய்வோம். பல ஆண்டுகளாக இது தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனால் விபரீதங்களும் ஆபத்துகளும் நிறைய நிகழ்ந்துள்ளன. மனித கழிவுகளைமனிதர்களை வைத்து சரி செய்யும் அவலம் நம் நாடு முழுவதும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதுவும் ஒடுக்கப்பட்டபிரிவினரே இந்த தொழிலில் காலங்காலமாகஈடுபட்டுக் வருகிறார்கள். கழிவுநீர் கால்வாய்களில் உள்ளே சென்று விஷவாயு தாக்கி உயிர் இழந்தோர்கள் ஏராளம். கோர்டில் சில ஆண்டுகளுக்கு முன் உத்தரவு வந்த போதிலும் நடைமுறையில் பல இடங்களில் மனிதர்களை வைத்து தான் சுத்தம் செய்யப்படுகிறது. இந்த சூழலில்கோவைமாநகராட்சியில் மனித கழிவுகளைமனிதனே அள்ளும் அவலத்திற்க்குமுற்றுபுள்ளி வைக்க ரோபோக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரோபோகுழிக்கு அருகே சென்றால் அதுவே இறங்கி சுத்தம் செய்கிறது. பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தபடி மாநகராட்சி ஊழியர்கள் இந்த ரோபோவை இயக்குகிறார்கள். ரோபோ 20அடி ஆழத்தில் இறங்கும் போது ஏதாவது விஷவாயுதாக்கினாலும் அதை கண்டுபிடித்து சொல்லிவிடும். சாக்கடையில் ஒரு மனிதன் செய்ய வேண்டிய வேலையை ரோபோவை.                                                                                                              -MMH


Comments