போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்
மாணவர்களை குறி வைக்கும் புகையிலை நிறுவனங்கள் இளம் வயதில் போதைக்கு அடிமையாகும் அவலங்கள் தடுக்கப்படுமா? புகைப்பிடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உயிரை கொல்லும் அரசே புகையிலை பொருட்களை விற்பனை செய்ய அனுமதி கொடுத்து, கோடிக்கணக்கானோரை புற்று நோயால் கொன்று வருகிறது.
இப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என, புகையிலை பொருளால் வரும் லா பம் ஒருபுறம், கேன்சர் சிகிச்சையினால் வரும் லாபம் மறுபுறம் என லாப நோக்கில் செய்துவருவதாகவும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு தலைமுறையை சீரழித்தது போதாதென்று, அடுத்த தலை
முறையையும் சீரழித்து தங்களது விற்பனையை பெருக்குவதில் புகையிலை நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இதற்காக பள்ளி அருகில் இருக்கும் பெட்டி கடைகளில், சிகெரெட்டுகள், கூல் லிப் போன்ற பொருட்கள் விலை குறைவாக விற்கப்படுவதாகவும் தெரிகிறது.
போலீசார் எச்சரித்தும், இன்னும் பல கடைகளில் பள்ளி மாணவர்களுக்கு இந்த புகையிலை பொருட்களை தங்கு தடையின்றி விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் பல மாணவர்கள் சிகரெட்டும் கையுமாக திரிவதை கண்கூடாக பார்க்க முடிவதை கண்டு, மனவேதனை அடைந்து வருகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
போதை தரும் மது உட்பட புகையி புகையிலை பொருட்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. போதை தரும் பொருட்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்தி தமிழக
பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்குமா தமிழக அரசு , !! பள்ளிகல்வித்துறை..!
மக்கள் விழிப்புணர்வு அமைப்பு
தலைமையகம்
கோவை மாவட்டம்.
Comments