தேயிலை தோட்டத்தில் ஒளிந்திருக்கும் அபாயம்

டமேற்க்கு வங்காள தேசம் தேயிலை உற்ப்பத்திக்கு பெயர் போனது. அங்கு பல நூற்றுக்கனக்கான ஆண்களும், பெண்களும் தெயிலை வியாபாரிகளாக தொழிலை ஆற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதில் ஒளிந்திருக்கும் அபாயம் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுதான் பூச்சிக்கொல்லியின் வெளிபாடுகள். வடவங்காள நகரத்தில் உள்ள பல்கலைக்கழக ஆராச்சியில் ஈடுபட்டு வந்த சுஸ்மிதா தத்தா டார்ஜிலிங் மலை பகுதியிலும் அதை சுற்றியுள்ள தேயிலை தோட்டத்தில் டாக்ட்ரேட் ஆராச்சியை தொடங்கினார். அதில் இரண்டு புகார் அறிக்கையை வெளியிட்டார்.


தேயிலை தோட்டத்தில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லியால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம். அதில் மனித உடல் கூறுகளில் டி.என்.ஏ மாற்றமும் நொதி செயல்பாடுகளும் குறைந்துள்ளது என்று கண்டுபிடிக்கபட்டது. தேயிலை தோட்டத்தில் வேலைசெய்யும், குடிப்பழக்கம் மற்றும் புகைபழக்கமில்லாத ஊழியர்களின் இரத்த மாதிரிகளை சேகரித்து சோதனை செய்ததில் உடல் கூறுகளின் செயல்பாடுகள் குறைந்துள்ளன என்று அறியப்பட்டது. இதில் நரம்பு சம்பந்தப்பட்ட செயல்பாடுகள் குறைந்துள்ளது என்று தெரியவந்துள்ளது. இதில் பூஞ்சைக்கொல்லியால் பல நோய்களுக்கு தொடர்புள்ளதாய் ஆகியுள்ளது என்று டாக்டர். தத்தா அவரின் பயோமார்கர் பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறார். ஊழியர்கள் பூச்சிக்கொல்லியால் பாதிக்கபட்டிருக்கும் காரணம் அவர்கள் தேயிலை பறிக்கும் போது பாதுகாப்பு உபகரணமான மூகமுடிகள், கைஉறைகள், கால் ஷூக்கள் என்று எதுவும் அணியப்படாததால் தோலில் ஊடுருவி சுவாச குழாயின் உள்சென்று பாதிப்புகளை ஏற்ப்படுத்தியுள்ளது. பூச்சிக்கொல்லியின் தாக்குதல் இவரின் உடலில் மட்டுமில்லாமல் இவர்களின் ஆடைகளில் சென்று அது அவரின் குடும்பத்தாரையும் தாக்கும் அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ளார்.


இனியாவது இதற்க்கு பாதுகாப்பு உபகரணங்களை உபயோகித்து வரும்முன் காப்போம் என்ற நீதீயை முன்வைத்து தேயிலை நிறுவனத்திற்க்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இனியாவது வெறும் ஊழியர்களாக நினைக்காமல் உயிர்களாக கருதி விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி பாதுகாப்பு கவசத்துடன் செயல்படும்படி அறிவுரைகளை வழங்கியுள்ளது இந்த வடவங்காள பல்கலைக்கழகத்தில் டாக்டரேட் ஆராய்ச்சி குழு.


முற்றும் எழுதியவர் எழுத்தாளர்


எ.யாஸ்மின் சென்னை                                                                                            -MMH


Comments