கஞ்சித் தண்ணீர் குடிப்பதால்

கஞ்சித் தண்ணீர் குடிப்பதால் 150 கலோரிகள் மட்டுமே அதிகரிக்கும். எல்லோர் வீடுகளிலும் சோறு வடித்த நீர் கிடைப்பது எளிமையான விஷயம். அதை வைத்து எப்படி செலவே இல்லாமல் உடல் எடையைக் குறைக்கலாம் என்று பார்க்கலாம் அரிசி வேக வைத்த நீரை வீட்டில் கஞ்சித் தண்ணீர் என்பார்கள். அதை சோறு வடித்ததும் சூடாக எடுத்து அதில் கொஞ்சம் உப்பு, மிளகுத் தூள் சேர்த்து கலந்து குடிக்கலாம். அவ்வாறு இதைக் குடிப்பதால் உணவு சாப்பிட்ட உணர்வு கிடைக்கும். வயிறும் நிறைவாக இருக்கும். சோறு சாப்பிடுவதால் 650 - 1000 கலோரிகள் அதிகரிக்கும். இதே கஞ்சித் தண்ணீர் குடிப்பதால் 150 கலோரிகள் மட்டுமே அதிகரிக்கும். கலோரி குறைவாக இருப்பது மட்டுமன்றி உடல் எடையைக் குறைக்கவும் உதவும். அதோடு உடலுக்கு ஆற்றல் அளிக்கும், உடல் நீர் வற்றுவதிலிருந்து பாதுகாக்கும். வயிற்றுப் போக்கு இப்படி மற்ற உடல் உபாதைகளுக்கும் உதவும். அரசி தண்ணீரை கண்டிஷ்னராக பயன்படுத்துவதும் நடைமுறையில் உள்ளது. இதை ஜப்பானியர்கள் பாரம்பரிய குறிப்பாக செய்து வருகின்றனர்.                                               -MMH


Comments