சர்வதேச ஆண்கள் தினம்

உலக சர்வதேச ஆண்கள் தினம் நவம்பர் 19 கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கமே ஆண்களின் நலன், சமத்துவம் மற்றும் ரோல் மாடலை ஊக்குவிக்கும் வகையில் முன்னிலைப்படுத்தப்படுகிறது. இதன் பரந்த நோக்கமே மனிதாபிமான மதிப்பு அடிப்படியில் அமைந்துள்ளது. ஆண்களின் பாஸிடிவ் பக்கங்கள் ஆண்கள் என்றாலே பலசாலி புத்திசாலியாகவும் உருவகபடுத்தபடுகிறது. ஒரு ஆணின் உடையை வைத்தோ அழகை வைத்தோ அவரின் குணாதிசியங்களை தீர்மானிப்பதில்லை இருப்பினும் ஆண் என்றாலே மதிப்பு, மரியாதை மற்றும் குடும்பஸ்தர் என்ற அந்தஸ்தை பெற்றவர். வாழ்க்கையில் முக்கிய தருனத்தில் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் சரியானதாகவும் நம்பகரமானதாக அமைய ஆண்களாலே முடியும். நம் நாட்டில் பெண்களை மதித்து தைரியத்தை ஊட்டி வேலைக்கு சென்று சம்பாதித்து மதிப்பையும் மரியாதையும் உருவாக்கி ஊக்கப்படுத்தி பெண்களை போற்றும் அளவுக்கு கௌரவப்படுத்தப்பட்டவர்கள் ஆண்கள் தான். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின் பெண் இருப்பது போல் ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின் ஒரு ஆண் இருக்கிறார் என்பது அப்பட்டமான உண்மை. ஆண்களின் மறுபக்கம் ஆண்கள் எதிர் கொள்ளும் சிக்கல்கள் அதிகம், பெண்களை காட்டிலும் ஆண்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகம். அதுமட்டுமில்லை ஆண்களில் அதிகம் இதய நோயாலும், நுரையிரல் புற்றுநோயாலும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இருந்தபோதிலும் மூன்றில் ஒரு ஆண் வன்முறையில் வீழப்படுகிறார்கள். இதற்க்கு காரணம் மன உளச்சலும், மன நோயாலும் ஏற்படும் விளைவுகள் தான். இந்த உலகில் பாதிக்கப்படும் ஆண்ணின் மன ரீதியான பிரச்சனையிலிருந்து மீட்டு ஊக்குவித்து உதவி புரிய வேண்டும், இதலால் வன்முறையை தடுக்கலாம். இதற்க்கு நம்மை சார்ந்த ஆண்கள் அதாவது கணவர், சகோதரர், தந்தை, உறவினர் யாராக இருந்தாலும் நமகென்ன என்றில்லாமல் சிரத்தை எடுத்து மனம்விட்டு பேசி அவர்களிடம் அன்பை கொடுத்து பண்பை வளர்த்து மனதின் இறுக்கத்தை தளர்த்து உறுதுணையாக இருந்து செயல்படுத்த வேண்டும். இதற்க்கு, பல தொண்டு நிறுவனங்கள் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி உடல் ரீதியான பிரச்சனைக்கு பல மருத்துவ சோதனைகளை செய்து இலவச சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் நோய் முற்றும் முன்பே சரி செய்து விடலாம். கொடிய நோய்க்கு ஆளாகாமல் தடுக்கலாம். ஆண்கள் தினம் கொண்டாடப்படுவதில்லை. உலகளாவிய அளவில் ஆண்கள் தினம் என்று போற்றப்படுகிறது. இவர்கள் பெண்களால் சமூகவலைதள மூலமாக பாராட்டப்பட வேண்டும். இப்படிப்பட்ட ஆண்கள் பல எதிர்வின குணாதியங்கள் கொண்ட ஆண்களுடன் கலந்திருக்கிறார்கள் இவ்வுலகம் முழுவதும். இவ்வழகிய குணாதிசயக் கொண்ட ஆண்களை பெண்கள் நாம் தான் கண்டறிந்து தேர்ந்தெடுத்து நம் வாழ்க்கை துணையாகவோ அல்லது சகோதரர்ராகவோ தோழமையாகவோ ஏற்றுக்கொண்டு நம் வாழ்வை அழகானதாகவும் ஒளிமயமானதாகவும் மாற்றிக்கொள்ளலாம்.


முற்றும்


எழுதியவர் காதாசிரியர்


எ.யாஸ்மின் சென்னை.                                                                                  -MMH


Comments