இயற்கை வளங்களை காப்ப

நீர், நிலம், காற்று மாசு உலகில் வாழும் ஒவ்வொரு உயிர்களுக்கும் நீர், நிலம், காற்று இவை மூன்றும் அத்தியாவசியமாயிற்று. மழை இயற்கை தந்த வரபிரசாதம். ஆறுகள், ஓடைகள், ஏரிகள், நீர்தேக்கத் தொட்டிகள் மற்றும் நிலத்தடி நீர் இவை எல்லாவற்றைக்கும் ஆதாயமாக இருப்பது மழைநீர். முறையாக சேமிக்கப்படாத மழை நீரால் வரும் காலங்களில் வறட்சி, தண்ணீர் பஞ்சம் நோய்கள் என்று எதிர் கொள்ளவேண்டிய விபரிதங்கள் ஏராலம். இயற்க்கை தந்த இந்த கொடையை மாசடைய செய்தால்.....? பல நோய்களுக்கு ஆளாகிறோம். நீர்நிலைகளில் கனிம பொருட்கள் சிதைந்து போவதால் நீர்நிலை மாசுபட வழி செய்கிறது. தொழிற்ச்சாலை கழிவுகள், சாக்கடை நீர், வீட்டுகழிவுநீர், கச்சா எண்ணெய், போன்றவற்றைகளால் மாசுபடுகிறது. காற்று: காற்று மாசடைவதற்க்கு முக்கிய காரணம் மரங்களை வெட்டுவது. இதற்க்கு எடுத்துக்காட்டு தலைநகர் டெல்லி. இங்கு காற்று அதிகளவில் மாசடைந்துள்ளது என்று புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. காற்றில் 79% நைட்ரொஜன் 20% ஆக்ஜிசன் 3% கரிமிலவாயு உள்ளது. இது அதிகரிக்கும் போது காற்று மாசுபடுகிறது. காற்றின் தரத்தை அளக்கும் “ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ்” கணக்குபடி காற்று மாசு 400 அளவையும் தாண்டியுள்ளது. இது 150 தாண்டினாலே உடலுக்கு கேடு. ஆனால் இது டெல்லியில் அதிக அளவு என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்க்கு காரணம் தொழிற்சாலைகளும் மோட்டார் வாகனங்களும் தான். ஆலைகளில் வெளிவரும் உலோகத்துகள்கள், இராசாயண தொழிற்ச்சாலையிலிருந்து வெளிவரும் கரிம சேர்மங்கள் இவை எல்லாம் காற்றை மாசுப்படுத்துகின்றன. இதன் விளைவாய் கண் எரிச்சல், காய்ச்சல், ஆஸ்மா , சுவாச பிரச்சனை, புற்றுநோய் உண்டாகிறது. மாசற்ற மேலைநாடுகள் வெளிநாடுகளில் ஏன் காற்று மாசடைவதில்லை? காற்று மாசுகென்று ஒரு அளவு கோல் உள்ளது. அதை தாண்டும் ஒவ்வோரு நாடும் காற்று மாசுவினால் பாதிக்கப்படுகிறது. மேலைநாடுகளை போல நம் நாடும் பாதிக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? அரசு மட்டுமே தலையிட்டு தீர்வுகாண வேண்டுமா என்ன? மக்களாகிய நாமும் நம்மால் முடிந்த வரை மாசு படாமல் தடுக்க சில வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். மோட்டர் வாகனங்களால் வெளிவரும் புகை கார்பன் மோனாக்சைடு, நைட்ரோஜன் ஆக்சைடு இவை நச்சு புகை படலத்தை உண்டு பண்ணுகிறது. மேலைநாடாகிய ஜெர்மனியில் காற்று மாசு இல்லை என்பது ஆச்சரியமான ஒன்று. ஆம் இங்கு வாகனங்கள் அதிகம் பயன்படுத்துவதில்லை அதற்க்கு மாறாக சைக்கிள் மற்றும் நடைபயணம் தான் இவர்கள் மேற்க் கொள்கிறார்கள் அதனால் தான் இந்த நகரம் தூய்மையான காற்றை சுவாசிக்கிறது. அதுமட்டுமில்லை குப்பை கொட்டுவதற்கென ஒரு இணையதளமே இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்......!!! இது ஸ்பேஸ் மேனேஜ்மென்ட் இணையதள மூலமாக செயல்படுத்தப்படுகிறது. இன்னும் சில தனியார் நிறுவனங்கள் குப்பைகளை நிலத்தடிக்குள் அதாவது அன்டர்கிரவுண்டில் குப்பைகளை கொட்டும்படி செய்துள்ளது. ஜெர்மனி ஜுரிக் நகரம் 89% சுத்தமான காற்றும் 92% சுத்தமான தண்ணீ ரும் இங்கு வாழும் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் ஆச்சிரியப்படுவதற்கில்லை . மரம் நடுதல்....... மரங்கள் இரைசலை குறைகிறது. காற்றை தூய்மையாக்குகிறது. பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் மூலமாக விழிப்புணர்வு முகாம்களை ஏற்படுத்தி மரம் நடுதல்....... வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்க்கு ஈடாக குறைந்தது பத்து மரங்களாவது நட்டல் வேண்டும்... இது அரசு உத்தரவிடவேண்டும். மரங்கள் வளர்த்து வரும் வீடுகளுக்கு அரசு சலுகைகள் அளிக்கவேண்டும். வேளாண்மை பொருட்கள் சலுகை விலையில் தரவேண்டும் பள்ளிகளில் மரகன்று நடும் போட்டி வைக்க வேண்டும். இப்படி நாட்டின் வளமைக்காக பங்குக்கொள்ளும் மாணவ மாணவியர்க்கு அரசு பாராட்டி பரிசளிக்கவேண்டும் இதனால் மரங்களின் முக்கியத்துவத்தையும் காற்று மாசு பற்றியும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் காடுகள் ஏரிகள் பாதுகாக்கப்படவேண்டும்.... தமிழ்நாட்டில் உள்ள ஏரிகள், நீர்நிலைகளை தூர்வாரி சுத்தப்படுத்தவேண்டும். கோவையில் கடந்த ஜுலை மாத்தில் குளங்கள், ஏரிகளை தூர்வாரி சுத்தபடுத்தப்பட்டது. வெள்ளலூர் கேம்ருன் நிறுவனத்துடன் இணைந்து தூர்வாரி நீர் வழிதடங்களை சுத்தப்படுத்தியது. இதனால் மழை காலங்களில் பல ஆண்டுக்குப்பிறகு இக்குளம் நிரம்பியது. தற்போது தண்ணீர் பஞ்சமில்லாத கோவை மாநகரம் என்று பாராட்டை பெற்றுள்ளது. சென்னையிலும் இதைப் போல் ஏரிகளை தூர்வாருவது, நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, மழை நீரை சேமிப்பது உள்பட பல யுக்திகளை பின்பற்றி செயல்படுத்தப்படவேண்டும் இது அரசு மட்டுமே செயல்படுத்தப்படவேண்டும் என்று காத்திருக்காமல் தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் ஆண், பெண்கள் எல்லோரும் ஒன்று கூடி நடைமுறைப்படுத்த வேண்டும் இதலால் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் தடுக்கலாம். மேலைநாடுகளை போல நாமும் சில யுக்திகளை பயன்படுத்தினாலே போதும் ஐஸ்லெண்ட் நகரத்தில் நாய்களுக்கு தடைவிதித்துள்ளதாம். நம்ம ஊரில் நாய்களுக்கா பஞ்சம், அதுவும் இரவில் எல்லா தெருக்களிலும் நாய்களின் ராஜியம் தான். இதில் பைக்கில் போகிறவர்களை எல்லாம் துரத்துவதும் கடிப்பதும் நடந்து கொண்டிருக்கும் விபரிதம் எராலம் அதற்க்காக நாய்களை விரட்டவோ கொல்லவோ இதன் அர்த்தம் இல்லை ....... மாறாக தெரு நாய்களை பிடித்து பராமரிக்க வேண்டும். இதனால் நாய்களின் கழிவுகளால் ஏற்ப்படும் தொற்று நோய், காற்று மாசு படுவதை தவிர்க்கலாம். கருவிகளை கொண்டு கட்டுப்படுத்தலாம் *குப்பைகளை சேகரிக்கும் தானியங்கி குப்பை பொறியை ஆற்றிலோ கடலிலோ பொறுத்தி குப்பைகளை அகற்றலாம் * தூசு சேகரிப்பான் கருவியை பொறுத்தலாம் *குப்பைகளை மறுசுழற்ச்சி செய்து பயன்படுத்தவேண்டும் உலகமுழுவதும் அச்சுறுத்தும் காற்று மாசுபாட்டை குறைக்க மக்களாகிய நாம் கைகோர்த்து ஒன்று சேர்ந்து சில வழிமுறைகளை பின்பற்றி வந்தால் வரும் காலங்களில் ஆரோகியமான தூய்மை இந்தியாவை உருவாக்க வழிவகுக்கவேண்டும்.                                                                          -MMH 


Comments