பசுமை நகரமாகும் சென்னை 2020

சென்னை மாநகரம் என்று சொல்லும் போது எல்லோருக்கும் நினைவுக்கு வருவது தண்ணீர் பஞ்சம் மட்டுமே..... பிரபல நாளிதழ் ஒன்றில் தண்ணீர் இல்லா மாநகரம் என்ற தலைப்பிலும் இன்ஸ்டாகிராமில் பதியும் படங்களுமே சென்னையை பற்றி தெரிந்து கொள்ளலாம்.


கடந்த ஐந்தாண்டுகளாக சென்னை சந்திதிருக்கும் சில நிலைபாடுகள் 2015ல் எற்பட்ட வெள்ளம், 2016ல் வரதா புயல் அதில் ஒரு லட்ச மரங்கள் சாய்க்கப்பட்டன. 2018-2019ல் குறைந்த மழை அதை தொடர்ந்து 2019ல் வறட்சி. இந்த இயற்க்கையின் சீற்றங்களும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களும் சென்னை மக்களிடம் விழிப்புணர்வு எழுந்துள்ளது. வீழ்ந்த மரத்தை நிலைநிறுத்த முடியாது இருப்பினும் புது கன்றுகளை நடும் முறையை செயல் படுத்த முடிவுக்கு வந்தது. இழந்த இழப்பை ஈடு செய்ய முடியாமல் போனாலும்....நம்மால் முடிந்தவரை செய்யும் சில யுக்திகளை பின்பற்ற முடிவெடுத்தது.


காடுகள் மழையை உண்டாகும். நாம் விதைக்கும் விதை வளர்க்கும் செடி, நடும் மரக்கன்றுகள் என்று ஒவ்வொன்று இந்த சுற்றுசூழலை குளுமையாக்கும் மழைநீர் தேக்கத்திற்க்கு வழி வகுக்கும்.


வருடத்தில் 308 சென்டிமீட்டர் மழை தேவைப்படுகிறது. ஆனால் சில இடங்களில் வெறும் 46 செ.மீ மழை பெய்து வறட்சி மிகுந்த நகரமானது சென்னை. இதை சரி செய்ய சில தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட மனிதர்களின் முயற்ச்சியால் களம் இறங்கினர். அவர் தான் பமீலா மல்ஹோத்திரா தன்னுடைய 300 ஏக்கர் நிலத்தில் கன்றுகளை நட்டும் செடிகளை வளர்த்தும் 13,000 சதுர அடி நிலத்தை சென்னை முகப்பேரில் காடுமயமாக்கினார் என்று சொன்னால் ஆச்சரியம் தான்.



மரங்கள் மழைநீரை நிரைப்பியதால், மழை நீர் சேமிப்பாலும் மரங்களாலும், காடுகளாலும் நீர் வரத்து அதிகரித்ததால் இந்த வருடம் மழை பற்றாக்குறை இருந்த போதிலும் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமலும் தண்ணிர் பஞ்சத்திலும் அடுத்தவருக்கு அள்ளி கொடுக்கும் நிலைமை ஏற்பட்டது என்று மகிழ்ச்சி கொண்டுள்ளார். இது தனிபட்ட மற்றும் குழுக்கள் அமைத்தும் சாதிக்க முடியும் என்று நிருபித்துள்ளார்.


சென்னை அடையார் 358 ஏக்கர் நிலத்தை பகுதியை தாவர மறுபயன்பாடு பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. 1.7லட்ச மரகன்றுகளில் 170 பூர்வீக இனங்கள் 2010-2016வரை நடபட்டுள்ளது. அடையார் மற்றும் கூவம் நதி மறுசீரமைத்து பொதுமக்களுக்கு ஒருவருக்கு ஒன்பது சதுரஅடி நிலத்தை ஒதுக்கப்பட்டு அதில் மரங்கள் நட்டும் செடிகளையும் விதைகளையும் விதைத்தும் பசுமை நிலமாக மாற்றி சீரமைத்தது பாராட்டுகுரிய விஷயம். இது செவ்வாய், வியாழன், சனிகிழமைகளில் நடத்தப்படுகிறது.


இப்படி பல குழுக்கள் தொடர்ந்து பூந்தமல்லியில் 150 மரகன்றுகளும் 1500 சதுர அடியில் மற்றும் தூத்துக்குடியில் 1600 மரகன்றுகளை 15000 சதுர அடியில் சென்னை கார்பரேசன் உதவியுடன் நடத்தப்பட்டுள்ளது. இதில் வெறும் நாற்றை நடுவது மட்டுமே இவர்கள் வேலையில்லை. மண் பரிசோதனை அதில் கரிம பொருள் சேர்த்தல், PH value, மண்வளத்தை அதிகப்படுத்துவது ஒரு செடிக்கும் மற்றொரு செடிக்கும் இரண்டுலிருந்து மூன்று அடி இடைவெளி விடுவது என்று பலதரப்பட்ட யோசனைகள் அறிவுரத்தப்பட்டுள்ளது.



இதுமட்டுமில்லை நடிகர் தியா மிர்சா, முன்னால் கிரிகெட் வீரர் கபில்தேவ் மற்றும் நடிகர் விவேக் பல விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி மக்களிடைய மரங்களின் பெருமையும் அதனால் ஏற்படும் மழையினாலும் மக்களுக்கு ஏற்படுத்தினார்கள் என்பது ஐயமில்லை. நடிகர் விவேக் குழுக்களினால் இதுவரை 33 லட்ச மரகன்றுகள் நடப்பட்டுள்ளது.


இயற்க்கையின் சீற்றத்திற்க்கு எதிராக நாம் ஒவ்வொரும் போராடி பஞ்சபூமியாக இருந்த சென்னை மாநகரை பசுமை நகரமாகவும் வளமிக்க நகரமகவும் மாற்ற தொண்டு நிறுவனம் மட்டும் செயல் பட்டால் போதாது நாம் ஒவ்வொருவரும் செயல்படுத்த வேண்டும்.


எழுதி அனுப்பியவர்


எ.யாஸ்மின் சென்னை .


                                                                                                                        -MMH


Comments