சிறுமிகளின் பாலியல் வன்கொடுமையும்

                                  சிறுமிகளின் பாலியல் வன்கொடுமையும்


பெற்றோரின் முக்கியதுவமும்.


பாலியல் வன்கொடுமை இதை பற்றி எத்தனை செய்திகள், இதனால் எத்தனை எத்தனைகொலைகள், வன்முறைகள் என்று அன்றாடம் நாளிதழிலும், செய்தி தாளிலும், டிவிசேனலிலும்படித்தாலும்பகிர்ந்தாலும் இதில் சிக்கி சீரழியும் சிறுமிகளின் பட்டியல் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. இதற்க்கு காரணமும் தடுக்கும் முறையும் என்ன என்று யாரும் யோசிப்பதில்லை. இதில் ஒவ்வோரு முறையும் சிறுமிகள் பலியாகிக்கொண்டேதான் இருக்கிறார்கள். இதை தடுக்கும் முறை தான் என்ன? பார்ப்போம்....


வயது வந்த பெண்குழந்தையோ அல்லது சிறுமியோ அவர்களை எப்போது கண்காணிக்கப்பட வேண்டும். பெண்பிள்ளையின் நம்பிக்கை வைப்பது ஒரு புறமிருக்க அவர்கள் சொல்வதையெல்லாம் நாம் நம்பவேண்டும் என்று அவசியமில்லை .


எனென்றால் அவர்கள் அறியாத குழந்தைகள். பொய், மெய் என்று அறியப்படாத வயது. வீபரீதங்கள் புலப்படும் அறிவாற்றல் இல்லை அவர்களுக்கு. பெற்றோர் தான் புரிய வைக்க வேண்டும். சிறந்த வழிகாட்டியாக அமையவேண்டும். இதற்க்குதாயாரின் பங்கு அதிகம்.


பெண் குழந்தை தனியாக வெளியே செல்வது தவிர்க்கப்பட வேண்டும் அப்படி அவசியம் ஏற்ப்பட்டால் பெற்றோரின் துணையோடும் அல்லது சகோதரர் துணையோடு செல்வது அவசியம்.


பிறந்தநாள் விழா, பார்டிடிரிட் என்று சொல்லும் போது அதன் உண்மையை ஆராயப்பட வேண்டும் இதில் ஆண் நண்பர்களின் பங்களிப்பு இருக்கிறதா என்று கண்டறியப்பட வேண்டும். இதை எல்லவற்றைக்கும் மேலாக பார்டியை தவிர்தல் நல்லது. அப்படியும் மீறி பிடிவாதம் பிடிக்கும் பிள்ளைகளுக்கு ஆலோசனை கொடுத்து வீட்டிலேயே விருந்தோதோழிகளுக்கு பார்டியோ பெற்றோரின் கண்காணிப்பில்வைக்கப்படலாம்.


டியூசன் செல்லும் குழந்தைகள் சிறப்பு வகுப்புகள் செல்லும் பொழுது டியூசன்டிச்சரின்செல்நம்பர் வைத்து..டியூசன்வரபடவில்லையென்றாலும்காரணத்தையும் அறிவிப்பை யும்குறுஞ்செய்தியாக பெற்றோர்க்கு அனுப்பும்படி முன் கூட்டியே தெரிவித்து வைக்க வேண்டும். பெற்றவர்கள் நம் குழந்தைகள் டியூசனில் இருக்கிறார்கள் என்று நினைப்போம் ஆனால் செல்லும் வழியில் விபரிதங்கள் ஏற்பட நேரிட்டால் நமக்கு துரிதமாக கிடைக்கும் செய்தியின் குழந்தைகள் இருக்கும் இடத்தை தேடி அவர்கள் காப்பாற்ற படலாம். தாமதம் ஏற்படும் போது என்ன வேணும்னாலும் நேரலாம் அவர்களுக்கு.


பெண்குழந்தைகள் தனிமையில் இருப்பது தனியாக செல்போனில் பேசுவதை தவிர்க்கப்படவேண்டும். அதிக நேரம் போனில் செலவிடும் போது கண்டிப்பாக பின் விளைவுகள் வரக்கூடும்.


பெண்குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அவர்களிடம் அன்பாக பேசி வீட்டின் வெளியே செல்லும் போது எதிர்பாராதவிதமாக ஆபத்துக்கள் பற்றியும் ஆண்கள் மூலம் ஏற்படும் பாலியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதை தடுக்கப்படும் தற்காப்பு வழிமுறைகளையும் சொல்லித்தர வேண்டும்.


சிறுவயதிலிருந்தே தற்காப்பு கலையானகாராத்தே, சிலம்பாட்டம், குத்துச்சண்டை வகுப்புகள் சேர்த்து நம் பெண்பிள்ளைகளைசக்திவாய்ந்தவர்களாகவும்பலசாலியாகவும் வளர்க்க பட வேண்டும்.


பெண் குழந்தைகளைபெற்றால் மட்டும் போதாது அவர்களை பேணி காப்பதும் கண்காணிப்பதும் அவசியம். பெற்றோர்கள் பெண்பிள்ளைகளுக்கு சில வழிமுறைகளை சொல்லி தந்து அதை பின்பற்ற முறையும் அமல்படுத்த வேண்டும்.


முற்றும். எழுதியவர்


எ.யாஸ்மின் சென்னை .


 


                                                                                                                    -MMH


Comments