சட்ட அமைச்சரை பார்க்க எனக்கு பாஜக உறுப்பினர் அட்டை

சட்ட  அமைச்சரை பார்க்க போன எனக்கு பாஜக உறுப்பினர் அட்டை கொடுத்துட்டாங்க .. நீதிபதி ஜெயச்சந்திரன்.


சென்னை: மத்திய சட்ட அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத்தை சந்திக்க சென்ற தனக்கு தமிழக பாஜக உறுப்பினர் அட்டை வழங்கிவிட்டதாகவும், தமக்கு பாஜகவில் சேரும் எண்ணம் ஏதும் இல்லை என சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற் ற நீதிபதி எம்.ஜெய்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்க கடிதத்தில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஜூலை 6-ஆம் தேதி நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை கூட்டத்தில் பங்கேற்க வரும் மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத்தை சந்தித்து சட்டம் சார்ந்த சில முக்கிய விசயங்கள் குறித்து பேசுவதற்காக மட்டுமே சென்றிருந்தேன்.


அப்போது அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால், தனிப்பட்ட சந்திப்புக்காக எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை . அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் வரும் வரைமேடையில் காத்திருக்க சொன்னதால், மேடையில் காத்திருந்தேன். மத்திமை ச்சர் கால தாமதாக வந்ததாலும், நேரடியாக நிகழ்ச்சி தொடங்கிவிட்டதாலும், தான் மேடையிலேயே தொடர்ந்து காத்திருந்தேன். அப்போது அமைச்சரை சந்திக்க காத்திருந்த என்னை உறுப்பினராக சேர்த்து விட்டதாக கூறி தமிழக பாஜக அடையாள அட்டை கொடுத்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன். பாஜகவில் சேரும் எவ்வித எண்ணமும் இல்லை. ஆகையால் உறுப்பினர் சேர்க்கையை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜகவுக்கு தெரிவித்துள்ளேன். இதன் மூலம் தான் பாஜகவில் சேரவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன் என அதில் தெரிவித்துள்ளார்.


                                                                                                                                           -MMH


Comments