எரிசாராயம் எரியுது வயிறு

கேரள மாநிலம் முழுவதும் கள்ளுக்கடைகள் செயல்பட்டு வருகிறது.இந்த கள்ளுக்கடைகள் மூலம் விற்பனை செய்யும் கள்ளில் "கிக்" அவ்வளவு இருக்காது அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது தான் "கிக்" ஏறும் இதற்கு செலவு அதிகம் ஆகும் என்ற காரணத்தால் கள்ளுக்கடைகளை தவிர்த்து ஒயின் ஷாப் தேடி செல்லும் குடிமகன்கள் இதனால் கள்ளுக்கடைகள் வருமானம் இல்லாமல் இருக்கும் நிலையில் வருமானத்தை உயர்த்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக கள்ளில் "கிக்" கிடைப்பதற்காக வாடிக்கையாளர்கள் திருப்தி அடைய கள்ளில் எரிசாராயம், கலக்கப்படுகின்றன. இவ்வாறு கலப்படம் செய்த கள்ளின் விலை மிகவும் குறைவு என்பதாலும் ஒரிஜினல் கள்ளை விட கலப்பட கள்ளுக்கு "கிக்"அதிகம் கிடைப்பதாலும் கலப்பட கள் அதிகளவில் விற்பனையாகிறது. தினமும் கிடைக்கின்ற ஒரிஜினல் கள்ளின் மதிப்பை விட பத்து மடங்கிற்கும் மேல் விற்பனையாகிறது என்பது நிஜம். ஆனால், இதுகுறித்து அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதில்லை என்பதும் உண்மை.கள்ளில் எரிசாராயம் குறைந்த அளவு கலக்கும் பொழுது பிரச்சினை வருவதில்லை ஒருசில நேரங்களில் அளவுக்கு அதிகமாக கலக்கும் பொழுது பிரச்சினைவருகிறது                                               .


சாதாரணமாக விற்கும் கள்ளில் இவ்வளவு "கிக்" இருப்பதில்லை என்றும்சாதாரணமாக விற்கும் கள்ளில் இவ்வளவு "கிக்" இருப்பதில்லை என்றும் இன்றும் மட்டும் எப்படி என்று கடைக்காரர்களிடம் வாடிக்கையாளர்கள் புகார் செய்வதும் , சண்டை காட்டுவதும் வடிக்கை ஆகிவிட்டது "இப்படி சண்டை வரும்போது அங்குபிரச்சினை இருக்கிறது என்றுதான்சொல்லவேண்டும்"கேரளா வில் கடந்த 2010 ஆண்டு கலப்படம் செய்த கள்ளை குடித்து பல பேர் இறந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கலப்படம் செய்யும் கள்ளுக்கடைகளை அதிகாரிகள் விரைவாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கேரள மக்களின் கோரிக்கை ஆகும். கள்ளில் கலப்படம் செய்ய தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்தி வர இருந்த 9940 லிட்டர் ஏரிசாராயத்தை பொள்ளாச்சியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த இடத்தில் பறிமுதல் செய்துள்ளார்கள் தமிழக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் மத்திய நூண்ணறிவு போலீசார். வேட்டை தொடருமா அல்லது பாக்கெட் நிறையுமா பொறுத்திருந்து பார்ப்போம்.


பொள்ளாச்சி


-M.சுரேஷ்குமார்                                                                                                -MMH


Comments