வரம்பை மீறும் தின்பண்டங்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அன்றாடம் விரும்பி சாப்பிடும் பதப்படுத்தப்படும் திண்பண்டங்கள் பாதுக்காப்பானதா என்று நாம் ஆராயவதில்லை அதற்க்கு பதில் அதன் ருசிக்கு அடிமைப்பட்டு இரண்டு வயது குழந்தைகளுக்கும் நாம் பழக்கப்படுத்தி விடுகிறோம்.


இதில் உப்பும் கொழுப்பும் அதிக அளவு கலந்துள்ளது என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள து. (CSE) centre for science and Enviornment . 33 பிரபலமான திண்பண்டம் நிறுவனம் 14 வகை மாதிரிகளான சிப்ஸ், இன்ஸ்ட ண்ட் நூடுல்ஸ், பர்கர், பிசா, வறுத்த சிக்கன் (Brosted chicken) என்று ஆய்வுசெய்தனர் இவை யாவையும் டெல்லியில் உள்ள சூப்பர் மார்கெட், பாஸ்ட்ஃபுட், மலிகை கடைகளில் சேகரித்தது.


Recommemded Dietry Allowances (RDA) சொல்வது என்ன வென்றால் நாம் அன்றாடம் 5கி உப்பு, 60கி கொழுப்பு, 300கி கார்போஹைடிரேட், 2.2கி டிரான்ஸ் ஃபேட் (transfat) மட்டுமே உட்கொள்ள வேண்டும். இதில் காலை, மதியம், மற்றும் இரவு உணவில் 25% மேல் செல்லவும் கூடாது திண்பண்டங்களில் 10% மேல் உப்பும் கொழுப்பும் நம் உடலுக்கு சேருவது ஆபத்தை விளவிக்கும்.


Haldiram aloo Bhujia ஆளு புஜியாவில் வெறும் 231கிராமில் 7கி உப்பும், 99A கொழுப்பும் நிறைந்துள்ளதாம். (Saturated and unsaturated fat). இது குழந்தைகளுக்கு மட்டும் கெடுதல் என்று ஒதுக்கி வைக்கும் விஷயம் அல்ல. நாம் அன்றாடம் செய்யும் கூட்டு, பொரியல் ருசிக்காக சேர்க்கப்படும் மேகி மசாலாவில் 704 சோடியம், திண்பண்டங்களில் 50 சதவிதமும், ஹல்திராம் வகையில் 35% உப்பும், 26% கொழுப்பும் இருப்பதாக ஒருமித கருத்தை தெரிவிதுள்ளது.


திண்பண்டங்களில் தயாரிக்கப்பட்டுள்ள மற்றும் சேர்க்கப்பட்டுள்ள உப்பும் கொழுப்பின் விகிதத்தை அதன் உரையில் தெரிவிக்கப்படவேண்டும் என்றாலும் இதை நடைமுறையில் சில உணவு வகையில் கொண்டுவரப்படவில்லை. இந்த விதிகள் முறையாக விரைவில் சட்டமாக்க பட வேண்டும் இல்லையேல் பல பக்க விளைவுகளுக்கு ஆளாக்கப்படுவார்கள். இதனால் எற்படும் விளைவுகள் என்னவென்றால் எடை அதிகரிப்பு, உயர் இரத்த அழுத்தம் இதனால் இதய நோய், கிட்னி பாதிப்பு என்று பலதரப்பட்ட நோய்க்கு உள்ளாவார்கள்.


இதனால் எற்படும் விளைவுகள் என்னவென்றால் எடை அதிகரிப்பு, உயர் இரத்த அழுத்தம் இதனால் இதய நோய், கிட்னி பாதிப்பு என்று பலதரப்பட்ட நோய்க்கு உள்ளாவார்கள். 


இதை தடுக்க நாம் உணவுபழக்கவழக்கத்தை மாற்றிக் கொள்ளதான் வேண்டும். நோறுக்கு தீணிகளை தவிர்த்து அவித்த வேர்கடலை, சுண்டல், பழகலவை, காய்கறிகலவை, நாட்டுமுட்டை ஆம்லெட், குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி செய்யப்படும் அரிசி வத்தல், நேந்திரகாய் வத்தல், உருளைகிழங்கு கட்லெட், பாலில் ஊறவைத்த அவல் மற்றும் வறுத்த பொறிகடலை என்று நம்மை ஆரோகிய பக்கத்துக்கு செல்லவேண்டும். நம்மை பின்பற்றும் நம் குழந்தைகளும் அவரின் எதிர்காலமும் நோயற்றதாகவும், ஆரோகியமானதாகவும் அமைய வழிவகுக்கும்.


எழுதி அனுப்பியவர்


எ.யாஸ்மின் சென்னை .


                                                                                                                                               -MMH


Comments