பாதிரியாரும் இருகுழந்தைகளும் உயிருடன் எரித்துக் கொலை


பாதிரியாரும் அவரது இருகுழந்தைகளும் பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளால் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட நாள் ஜனவரி 22, 1999 என்ற விஷயம் எத்தனை நபர்களுக்கு தெரியும் ! ஒரிசா மாநிலத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு பஜ்ரங் தள்ளைச் சேர்ந்த தாரா சிங் என்ற இந்துத்துவ பயங்கரவாதியின் தலைமையில் வந்த கும்பலொன்று...



அம்மாநிலத்தில் கிறித்துவ மதத்தையும் பரப்பி கொண்டு பல்வேறு மக்கள் தொண்டுகளையும் செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறித்துவப் பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸையும், சிறுவர்களான பிலிப், திமோதி என்ற அவரது இரு மகன்களையும் - அவர்கள் மூவரும் ஒரு ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் அவர்கள் கதற கதற உயிரோடு எரித்துக் கொன்றனர்..! |



இப்பயங்கரவாதப் படுகொலையைச் செய்த தாரா சிங் உள்ளிட்ட 13 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த குர்தா குற்றவியல் நீதிமன்றம், தாராசிங்கிற்குத் தூக்கு தண்டனையும், மற்ற 12 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது..!


இவ்வழக்கின் மேல்முறையீட்டில், ஒரிசா உயர் நீதிமன்றம் தாரா சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது குறிப்பிடத்தக்கது.


                                                                                                                             -MMH


Comments