மேற்கு வங்கம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம்


மேற்கு வங்க அரசு சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் : வரும் 27-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றும் மம்தா அரசு மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையில், வரும் 27-ம் தேதி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு எதிராக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான, செல்வி. மம்தா பானர்ஜி, தொடக்கத்திலிருந்தே கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்.



இந்நிலையில், வரும் 27-ம் தேதி பிற்பகல் 2 மணி அளவில், மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக, அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்காக, சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, கேரளா, பஞ்சாப் ஆகிய மாநில அரசுகள், சட்டப்பேரவையில், ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.                                                                                           -MMH


Comments