சமுதாயக்கூடம் சமூகவிரோதிகளின் கூடாரமாக


திருமண விழா காதுகுத்து விழா போன்ற சுப நிகழ்ச்சிகள் பெரும்பாலும் திருமண மண்டபங்களில் நடைபெற்றுவருகிறது. ஏழை-எளிய மக்கள் இது போன்ற சுப நிகழ்ச்சிகளை திருமண மண்டபத்தில் அதிக தொகை கொடுத்து நடத்த முடியாத காரணமாக தமிழக அரசு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சமுதாயக் கூடங்கள் கட்டி தரப்பட்டுள்ளது, அதனில் மக்கள் சுப நிகழ்ச்சிகளையும் அரசு விழாக்களும் நடத்த ஏதுவாக இருந்து வருகிறது.


இந்நிலையில் பொள்ளாச்சி அடுத்து சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட மோதிராபுரம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சமுதாயக்கூடம் கட்டி தரப்பட்டுள்ளது பல ஆண்டுகளாக மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்த இந்த சமுதாயக்கூடம் இப்பொழுது சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது இந்த நிலையில் தற்போது குடிமகன்கள் இரவு நேரங்களில் மது அருந்துவதும் வாடிக்கையாகிவிட்டது,


கதவு ஜன்னல் உடைந்து பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது, மேலும் சிலர் இந்த சமுதாய கூடத்தை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள், இரவு நேரங்களில் சிலர் அங்கு தங்குவதாக சொல்கிறார்கள், இதனால் பொதுமக்கள் சுப நிகழ்ச்சிகளை அங்கு நடத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். எனவே இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த சமுதாய கூடத்தை புதுப்பித்து தரவேண்டும் என்பது இங்குள்ள மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


-POLLACHI SURESH KUMAR.                                                                                               -MMH


Comments