சட்டசபையில் தி.மு.க.வின் பலம்


தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் உயிரிழப்பு : சட்டசபையில் தி.மு.க.வின் பலம் என்ன ? தி.மு.க.வைச் சேர்ந்த திருவொற்றியூர் எம்.எல்.ஏ. சாமி மற்றும் குடியாத்தம் எம்.எல்.ஏ. காத்தவராயன் ஆகியோர், அடுத்தடுத்த நாட்களில் உடல் நலக் குறைவால் உயிரிழந்தனர்.


தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் மறைவுக்குப் பிறகு, தமிழக சட்டப் பேரவையில் அரசியல் கட்சிகளின் பலத்தை பார்க்கலாம்....


தற்போது, அ.தி.மு.க. உறுப்பினர்கள் - 124 பேர் உள்ளனர்.


தி.மு.க. உறுப்பினர்களின் எண்ணிக்கை 98 ஆக குறைந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 7 உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர்.


சுயேட்சை உறுப்பினராக டி.டி.வி.தினகரன் உள்ளார். சபாநாயகர் மற்றும் நியமன உறுப்பினர் ஒருவரும் உள்ளனர். தற்போது உறுப்பினர் காலியிடம் 2 ஆக உள்ளது


2 உறுப்பினர்கள் மறைவை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்துவார். இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்தால் ஆறு மாதத்திற்குள் திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும்.                                          -MMH


Comments