சந்திரசேகர ராவ்வுக்கு என்னாச்சு அவரும் ஆன்ட்டி இன்டியன் ஆகிட்டாரே


கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் வழியில் தெலங்கானா அரசும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முடிவு செய்துள்ள நிகழ்வு மோடிக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.


அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று குடியுரிமை சட்டத் திருத்தம் கொண்டுவந்தது மோடி அரசு. இந்த சட்டத்தை எதிர்த்து டெல்லி தொடங்கி கன்னியாகுமரி வரையிலும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது. டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கொடூரமாக தக்கப்பட்டனர்.



இந்த சட்டத்தை இதனை எதிர்த்து இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகளின் அரசு, தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. அப்படி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்களை ஆன்ட்டி இன்டியன் என்று கடுமையாக விமர்சனம் செய்துவருகிறது ஆளும், பா.ஜ.க. தரப்பு. இந்த நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் இப்படியொரு தீர்மானம் நிறைவேற்ற முடிவு எடுத்துள்ளார் என்பதுதான் ஆச்சர்யம். இதுகுறித்து சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், தெலங்கானா மாநில சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டது.


மதத்தின் பேரால் நாட்டை பிளவுபடுத்தக்கூடாது என்று சந்திரசேகர ராவ் கூறியிருக்கிறார். அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்த தீர்மானத்தை சந்திரசேகர ராவ் அரசு கொண்டுவருகிறது. ஆனால், இன்னமும் இந்த சட்டத்தை நிறைவேற்றாமல் விடமாட்டேன் என்று மோடி உறுதியாக இருப்பதைப் பார்த்தால், நாட்டை போராட்ட களமாகவே வைத்திருப்பது உறுதி என்று தெரிகிறது.                                                                                                                             -MMH


Comments