பாலியல் சில்மிசம் கொடுத்ததாக தலைமையாசிரியர்


பொள்ளாச்சி நெகமம் அருகே உள்ள காட்டம் பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் மாகாளியப்பன் கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கு படிக்கும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் சில்மிசம் கொடுத்ததாக மாணவ குழந்தைகள் தங்களது பெற்றோரிடம் கூறி கதறி அழுத உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளியின் தலைமையாசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 10ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பாலியல் குற்றத்திற்கு ஆளான தலைமையாசிரியரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் பணியிடமாற்றம் செய்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணனன் அவர்களை வன்மையாக கண்டித்த மாணவிகளின் பெற்றோர்கள். தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர் இதனால் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பவர்கள் மிரட்டப் பட்டார்கள் இதனால் குழந்தைகளின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளிக்கல்வித் துறைக்கு தகவல் தெரிந்தும் இதுவரை எந்த வித விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை குழந்தைகள் நல அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் விசாரணை நடத்தப்படவில்லை இதனால் மன வேதனையிலும் மிகுந்த வருத்தத்தில் மாணவிகளும் மாணவிகளின் பெற்றோர்களும் இந்த நிலையில் தலைமையாசிரியர் மீது மாணவிகளின் பெற்றோர் புகார் அளிக்க தொடங்கியதும் ஒரு மாணவியின் தாயிடம் தான் தெரியாமல் செய்துவிட்டதாக மன்னித்து விடும்படி, தலைமையாசிரியர் பேசியுள்ளார். எனவே பாலியல் தொந்தரவு செய்த தலைமையாசிரியர்,



தலைமை ஆசிரியரை கைது செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.


மாகாளியப்பன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில் கோவை மாவட்ட குழந்தைகள் நல வாரியம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது விசாரணை நடத்திய நெகமம் போலீசார் தலைமையாசிரியர் மாகாளியப்பனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தது நெகமம் போலீஸ் பின்பு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


-M.SURESH KUMAR.                                                                                                                -MMH


Comments