கொரோனா: உலக பலி 11,838


புதுடில்லி: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 11,838 ஆக உயர்ந்தது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் 270, இந்தியாவில் 4 பேர் பலியாகி உள்ளனர். உலகின் மற்ற நாடுகளுக்கும் பரவிய கொரோனாவால் மொத்தம் 2,84,008 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் பரவத்துவங்கிய கொரோனாவால் அந்நாட்டில் 81,000க்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்தனர். 



மொத்தம் 3,255 பேர் உயிரிழந்தனர். சீனாவை விட இத்தாலியில் அதிகம் பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அங்கு ஒரே நாளில் நேற்று மட்டும் 627 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை மொத்தம் 4,032 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் மொத்தம் 47,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனாவால் ஸ்பெயின் அதிகம் பாதிப்பு அடைந்துள்ளது. அங்கு 21,510 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதுவரை அங்கு 1,093 பேர் உயரிழந்துள்ளனர். அமெரிக்காவில் தற்போது கொரோனா வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5,640 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 257 பேர் உயிரிழந்துள்ளனர்.


நேற்று மட்டும் அமெரிக்காவில் 50 பேர் பலியாகி உள்ளனர்.ஈரானில் மொத்தம் 19, 644 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,433 பேர் பலியாகி உள்ள நிலையில் நேற்று மட்டும் 149 பேர் உயிரிழந்தனர்.


பிரான்ஸிலும் வேகமாக கொரோனா பரவி வருகிறது அங்கு 12,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 450 பேர் உயிரிழந்துள்ள நிலையில் புதிதாக நேற்று மட்டும் 78 பேர் உயிரிழந்துள்ளனர்.                                                                                                          -MMH


Comments