கொரோனா வைரஸ் பீதி ஒரே நாளில் 84 விமானங்கள் ரத்து


சென்னையில் இன்று ஒரே நாளில் 84 விமானங்கள் ரத்து. கொரோனா வைரஸ் பீதி காரணமாக சென்னை விமானநிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.இதனால் சென்னை சர்வதேச விமானநிலையம் மற்றும் உள்நாட்டு விமானநிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. எனவே போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் சென்னை விமானநிலையத்தில் இன்று ஒரே நாளில் 50 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.


மலேசியா-சென்னை 6, இலங்கை-சென்னை 4 விமானங்கள், குவைத்-சென்னை 3 விமானங்கள், மஸ்கட்-சென்னை 3 விமானங்கள், துபாய்-சென்னை 2 விமானங்கள், தாய்லாந்து-சென்னை 2 விமானங்கள்,தோகா, சிங்கப்பூர், பக்ரைன், ஜெர்மன், லண்டன் ஆகிய இடங்களிலிருந்து சென்னை வரும் தலா ஒரு விமானம், மொத்தம் 25 வருகை விமானங்களும், அதைப்போல் சென்னையிலிருந்து இந்த நாடுகளுக்கு புறப்பட்டு செல்லும் 25 விமானங்களும் மொத்தம் 50 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.



அதைப்போல் போதிய பயணிகள் இல்லாமல் சென்னையிலிருந்து டில்லி செல்லும் 4 விமானங்கள், பெங்களூர் செல்லும் 4 விமானங்கள், மும்பை செல்லும் 3 விமானங்கள், மதுரை,ஹைதராபாத், கொச்சி, கோவா,கொல்கத்தா, தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு செல்லும் தலா ஒன்று வீதம் மொத்தம் 17 விமானங்களும், இந்த நகரங்களிலிருந்து சென்னைக்கு வரும் 17 விமானங்களும், மொத்தம் 34 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் மட்டும் சென்னை விமானநிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் மொத்தம் 84 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.   -MMH


Comments