அனுமதி பெறாமலேயே சொகுசு விடுதிகளை நடத்தி


னுமதி பெறாமலேயே சொகுசு விடுதிகளை நடத்தி கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை காளியாபுரம் மீன்கரை ரோடு சேத்துமடை ஆழியாறு உள்ளிட்ட இடங்களில் தனியார் சொகுசு விடுதிகள் அதிக அளவில் செயல்பட்டுவருகின்றன இதில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மக்கள் விழிப்புணர்வு அமைப்பு பொள்ளாச்சி நகர பொறுப்பாளர் சுரேஷ் குமார் குற்றம் சாட்டுகிறார் இதுகுறித்து அவர் கூறியதாவது..


ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள சொகுசு தங்கும் விடுதிகளில் 70 சதவீதம் தங்கும் விடுதிகளுக்கு முறைப்படி அனுமதி இல்லை வனத்துறை வருவாய்த்துறை உள்ளிட்ட ஏராளமான துறைகளிடம் , அனுமதி பெற்றுத்தான் இதுபோன்ற சொகுசு விடுதிகள் நடத்த வேண்டும் ஆனால் அவ்வாறு அனுமதி பெறும் பட்சத்தில் இந்த சொகுசு விடுதிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்ற காரணத்தால் அனுமதி பெறாமலேயே சொகுசு விடுதிகளை நடத்தி வருகின்றனர்.



முறைப்படி அனுமதி பெறாமல் மது அருந்த அனுமதிப்பது மற்றும் பெண்களுடன் உல்லாசமாக இருக்க அனுமதிப்பது வெளிமாநிலங்கள் வெளிநாடுகளிலிருந்து தங்கிச் செல்வோரின் முழு தகவல்களை முறையாக பதிவு செய்யாமல் இருப்பது என பல முறைகேடுகள் சொகுசு விடுதிகளில் அரங்கேறி வருகிறது.


ஆகவே போலீஸ் துறை, வருவாய் துறை, வனத் துறை, உள்ளிட்ட துறையினர் விதிகளை மீறி செயல்படும் சொகுசு விடுதிகளை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.


மக்கள் விழிப்புணர்வு அமைப்பு பொள்ளாச்சி நகர பொறுப்பாளர் நாளைய வரலாறு எம் சுரேஷ் குமார்.                                                           -MMH


Comments