குட்டி குத்துச்சண்டை வீரர்


ரெல்லாம் கொரோனா பயத்தில் உறைந்து போயிருக்க, சத்தமில்லாமல் அதை எதிர்க்க தன் உடலை உரமேற்றிக் கொண்டிருக்கிறார் ஒரு குட்டி குத்துச்சண்டை வீரர். கொரோனாவோ....... கான்சரோ......! உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஆரோக்கிய உடலை அண்ட வைரஸ்கள் அச்சப்படும். நல்ல உணவு, தூய காற்று, குடிநீர் இவற்றுடன் முறையான உடற்பயிற்சி இருந்தால் மட்டுமே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். அப்பயிற்சி பிடித்த கலையாகவும் இருந்தால் இன்னமும் சிறப்பு.



குத்துச்சண்டை என்பது ஒரு போர் விளையாட்டாகும், இதில் இரண்டு பேர், வழக்கமாக பாதுகாப்பு கையுறைகளை அணிந்துகொண்டு, ஒரு குத்துச்சண்டை வளையத்தில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட நேரத்திற்கு ஒருவருக்கொருவர் குத்துகளை வீசுவார்கள். அதிக குத்துகளை வீசியவர் வென்றவர் ஆகிறார். ஒவ்வொரு அமெச்சூர் குத்துச்சண்டை வீரருக்கும் ஒரு ஒலிம்பிக் , காமன்வெல்த், சர்வதேசம் , தேசியம் என்று பதக்கம் வெல்வதே நிரந்தர கனவாகும்.


குத்துச்சண்டையில் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்களான முஹம்மது அலி, மைக் டைசன் , ஜார்ஜ் ஃபோர்மேன் போன்ற பெயர்களை குத்துச்சண்டை ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள். அந்த வரிசையில் இடம்பெற இதோ நம் கோவையில் ஸ்ரீ விஸ்வேஷ்வரா பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் E.ஹரீஷ் (பெற்றோர் திரு. இளங்கோவன் & திருமதி. திவ்யா) உருவாகி வருகிறார். இக்கட்டுரை நாயகரான இவரை மிகச் சிறந்த 'பாக்ஸராக' உருவாக்கி வருகிறது கோவை Prem MMA Academy. ஜுன் மாதம் மைசூரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் தங்கம் வெல்லும் அவாவில் கடும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இவர் ஏற்கெனவே மூன்று முறை தேசிய அளவில் பதக்கம் பெற்றவர் என்பதோடு சமீபத்தில் "WILL MEDAL OF WORLD RECARDS" சான்று பெற்று ஜொலிக்கிறார்.


மற்றவர்களில் இருந்து மாறுபட்ட துறையைத் தேர்வு செய்து அதில் சிறந்து விளங்கும் ஹரீஷ் விளையாட்டுத்துறைக்கு ஒரு ஒளிவிளக்கு. உலகெங்கும் அவர் புகழ் பரவ, சிறந்த குத்துச்சண்டை வீரராக முத்திரை பதிக்க நாமும் வாழ்த்துவோம்.


நல்வாழ்த்து வழங்குவது,


-குறிச்சி நிருபர் ஈஷாவுடன், Ln. G.INDRA DEVI, M.A., M.Phil.,                                 -MMH


Comments