மக்கள் கூட்டம் ஊரடங்கு உத்தரவைக் கேலிக் கூத்தாக்குகிறது


கொரோனாவுக்கு எதிரான மக்கள் நலப்பணி சிறப்பாக நடைபெற்று வருவதற்கு முதற்கண் நன்றியும் பாராட்டுகளும். மக்களுக்கான அத்தியாவசியப் பொருளான காய்கறி வாங்க குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி விற்பனை செய்வது சிறப்பானதே! ஆனால் அங்கே குவியும் மக்கள் கூட்டம் ஊரடங்கு உத்தரவைக் கேலிக் கூத்தாக்குகிறது.


குறிப்பிட்ட நேரம் கடந்தால் கிடைக்காது....... நாளைக்கு வருமோ வராதோ.......என்ற உணர்வே மக்களை இப்படி விழிப்புணர்வின்றி அலைய வைக்கிறது. எவ்வளவு சொன்னாலும் திருந்தாத மக்களை அப்படியே விட்டுவிட முடியாதே! நோய் பரவல் கட்டுக்குள் நிற்கவில்லை என்றால் 21 நாள் ஊரடங்கு மீண்டும் 21 நாள் எனத் தொடர வாய்ப்புள்ளது.



குவியும் மக்களைக் தடுக்கும் விதமாக கடைவீதிக்கு வரும் மக்களை முதலில் தடுக்க வேண்டும். ஆம்! அந்தந்த வசிப்பிடங்களில் உள்ள கடைகள் மூலம் மட்டுமே மக்கள் பொருட்கள் வாங்கவேண்டும். பொருட்கள் வாங்கவேண்டும்.


குடியிருப்பு பகுதியில் உள்ள கடை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கி, அவர்களை மட்டுமே கடைவீதிக்குள் அனுமதித்து காய்கறிகளைக் கொள்முதல் செய்து உள்ளூர் கடைகள் மூலம் விற்பதால் மக்கள் நீண்ட தொலைவு பயணிப்பதும் கூட்டம் சேர்வதும் தவிர்க்கப் படலாம்.


மேலும் கடைவீதிக்கும் உழவர்சந்தைக்கும் மக்கள் படையெடுக்கக் காரணம் உள்ளூர்க்கடைகளில் இரண்டு மடங்கு மூன்று மடங்கு கூடுதல் விலை வைத்து விற்பதாகும். அதிகாரிகள் அதை கவனத்தில் கொண்டு விலைப் பட்டியலை மக்கள் பார்வைக்கு வைக்கவும், தேவைப்பட்டால் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆவன செய்ய வேண்டும்.


என்றும் மக்கள் பணியில்,


-ஃபர்க்கத்துள்ளாவுடன் Ln. இந்திராதேவி முருகேசன், கோவை.


                                                                                                                          -MMH


Comments