வனத்துறையினர் கண்டும் காணாமல் இருந்து


பொள்ளாச்சி ஆனைமலை அடுத்த தம்மம்பதி, கோழிபாறை, இந்தப் பகுதிகளில் மலைவாழ் மக்கள் அதிகம் வசித்து வருகிறார்கள் இவர்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான விறகுகளை எடுக்க அருகே உள்ள வனப்பகுதிகளில் சென்று வருவது வழக்கமாக இருந்து வருகிறது.


வனப்பகுதிக்குள் பாதுகாப்பில்லாமல் அடிக்கடி சென்று வருவதை வனத்துறையினர் கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள். இதனால் கோழி பாறை பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவர் வனத்துக்குள் சென்று விறகு எடுத்து வரும் வழியில் தனது தாகத்தைப் போக்க ஓடையில் தண்ணீர் குடிக்கும் போது அந்த வழியாக வந்த ஒற்றை காட்டு யானை ராமனை தாக்கியது.


இதனால் படுகாயமடைந்த ராமன் சத்தம் போட்டுள்ளார் உடனே வனத்துறையினர் வந்து ராமனை காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் யின் உதவியோடு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று ராமனுக்கு கை காலில் முறிவு ஏற்பட்டதாக பரிசோதித்த டாக்டர் தெரிவித்தார் இது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.


பொதுமக்கள் வனத்துக்குள் செல்லக்கூடாது என்று தடை இருந்தும் தடையை மீறி வனத்துக்குள் செல்வது குற்றமாகும் வனத்துறை அதிகாரிகளும் இதை கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர்.


நாளைய வரலாறு


-M.சுரேஷ்குமார் பொள்ளாச்சி.                                                                        -MMH


 


Comments