போலீஸ் புலம்பல் அதிகாரிகளின் பார்வைக்கு

-MMH


        நாளுக்கு நாள் வளர்ந்து வரும் கொரோனா பாதிப்பு நோயாளிகள் எண்ணிக்கை ஒருபுறம் என்றால் நிகழ்வின் தீவிரம் புரியாமல் இன்னமும் வெளியே எதையோ தேடிச் சுற்றித் திரியும் மனிதர்கள் மறுபுறம். இவர்களைக் கட்டுப்படுத்தும் பணியில் இருக்கும் காவலர்கள் பாடு மிகவும் கவலைக்கிடமாக இருப்பதுதான் இப்போதைய முதன்மைச் செய்தியாக நமக்குப் படுகிறது.


    ஆம்! தங்கள் உயிரைத் துச்சமென நினைத்து சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்வதும், விபரங்கள் சேகரித்து நடவடிக்கை எடுப்பதுமாக கடமையாற்றும் காவலர்கள் படும் சிரமம் கொஞ்சநஞ்சமல்ல போலும்.!


  காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் விளைவாக போத்தனூர் காவல் நிலையம் தற்காலிகமாக மாற்றப் பட்டுள்ளது.இதே நிலைதான் குனியமுத்தூர்  காவல் நிலையாம் கூட.கோவை மாநகர காவல் எல்லைகளை பார்வையிடச் சென்ற (பாதுகாப்புக் கவசத்துடன்தான்) நம் செவிகளில் விழுந்த சில காவலர்களின்  புலம்பல்களை காவல்துறை உயர் அதிகாரிகள் பார்வைக்குக் கொண்டு செல்ல விரும்புகிறோம்.



   பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் தங்களுக்குத் தேவையான பாதுகாப்பு முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி போன்றவைகள்  போதுமான அளவு வழங்கப் படுவதில்லை என்றும் தினமும் குறைந்தபட்சம், இரண்டு, மூன்று, இலக்க எண்ணில் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று புலம்புகிறார்கள்  சில  காவலர்கள்...!


கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டு தனிமைப் படுத்தப் பட்டிருக்கும் காவலர்கள் நிலைமையோ இன்னும் மோசம். பாதிக்கப்பட்ட காவலர்கள்  ஒருபுறம் சிகிட்சைக்காக மருத்துவமனையில் ...... அவர் குடும்பத்தவர் ஒருபுறம் மற்றவர்களிடம் தொடர்பில்லாமல்........! கவனிக்க யாரும் இல்லா நிலை உணருவதாக அக்காவலர்கள்  கலங்கியதைக் கேட்டு நமக்கே கண்கள் கசிந்தன.


இது போன்ற பேரிடர் காலங்களிலும் மற்ற சமயங்களிலும் பத்திரிகை துறை காவலர்களுக்கு என்றுமே நண்பர்கள்தான் மேலும் காவலர்கள் படும் சிரமங்களை காவல் உயர் அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்லும் ஒரு பலமாக இந்த செய்தியை பதிவு செய்கிறோம். 


யாருடைய மனதையும் புண்படுத்துவது நமது நோக்கமில்லை, மக்களைக் காக்கும் மகத்தான பணியாற்றும் காவலர்கள்தான் இப்போது நமக்கு கண்கண்ட தெய்வங்கள். அவர்கள் நலம் பேணுவதும், அவர்கள் உற்சாகமாகப் பணியாற்ற சூழல் அமைத்துக் கொடுப்பதும் காவல்துறை மேலதிகாரிகளின் தலையாய கடமையல்லவா? சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?


ஆதங்கத்துடன், Ln. இந்திராதேவி முருகேசன், கோவை.


நிருபர்கள் குழு:


சுரேஷ்குமார்,கிரி,ஈஷா,அசன்,பீர்,மகேந்திரன்,ரொசாரியோ,அருண்.



Comments