கஞ்சாக் கும்பலின் தலைவனின் தலை காரில்

     -MMH


      ஸ்ரீரங்கம் சந்துரு கடந்த சில வருடங்களுக்கு முன்பு பால்காரர் ஒருவரின் தலையை துண்டித்து எடுத்துக் கொண்டு சென்று, ஒரு வாரம் வெட்டிய தலையிருக்கும் இடத்தை காட்டாமல் அலைகழித்துக்கொண்டுயிருந்தார். அந்த கொலைக்கு பிறகே இவரை இப்பகுதி மக்கள் தலைவெட்டி சந்திரமோகன் என்று அடைமொழியுடன் அழைத்து வந்தனர். கடைசியில் அதே கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட அவருடைய மகன் இன்று சந்துருவின் தலையை வெட்டி எடுத்த சம்பவம் திருச்சியை பெரிய அளவில் உலுக்கியது.


ஸ்ரீரங்கம் சந்துரு என்கிற தலைவெட்டி இவர் பெரிய கஞ்சா வியாபாரி. தனக்கு கீழ் அடி, பொடி பசங்களை வைத்துக்கொண்டு கஞ்சா தொழிலைச் சிறப்பாகவும், வெளிநாட்டிலிருந்து யாரேனும் ஸ்ரீரங்கம் வந்தால் அவர்களை மிரட்டி பணம் பறிப்பது என்பதை முழு நேர தொழிலாகவும் கொண்டிருந்தார். இது குறித்து நாம் ஏற்கனவே நக்கீரன் இணையத்தில் விரிவாக எழுதியிருந்தோம்.


        


-ரவுடி சந்துருவின் தலை மற்றும் உடல் வெட்டி எடுக்க பட்ட நிலையில். 


இதன் தொடர்ச்சியாக சந்துரு மீது கொலை, திருட்டு மற்றும் வழிப்பறி என ஸ்ரீரங்க காவல்நிலையத்தில் மட்டும் 23 வழக்குகள், உறையூர் காவல்நிலையத்தில் 4 வழக்குகள, எடமலைப்பட்டிபுதூர் காவல்நிலையத்தில் 1 வழக்கும் கண்டோன்மென்டில் 1 வழக்கும், தில்லைநகரில் 2 வழக்குகளும், தஞ்சாவூரில் 1 வழக்கும், விராலிமலையில் 1 வழக்குமாக மொத்தம் 33 வழக்குகள் உள்ளது என பட்டியல் தாயாரிக்கப்பட்டு இதன் அடிப்படையில் குண்டாஸ் வழக்கு பாய்ந்து சிறையில் தள்ளினார்கள்..


இவருக்கு இப்பகுதியில் முன்விரோதம் அதிகம் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஸ்ரீரங்கம் ரயில்வே டிரைனேஜ் தெருவில் வசிக்கும் சுரேஷ் (35), சரவணன் (30), செல்வகுமார் (25) 3 பேரும் காரில் வந்து ஸ்ரீரங்கம் ரயில்வே பாலத்தில் வழிப்பறி டூவிலரில் இருந்தவரை தலையை துண்டித்தனர். பின்னர் அதே காரில் தலையுடன் ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் மூன்று பேரும் சரணடைந்தனர். கொலை வழக்கு குறித்து ஸ்ரீரங்கம் ஏசி இராமசந்திரன் விசாரித்துக்கொண்டிருக்கிறார் .


ஸ்ரீரங்கம் கஞ்சா கும்பலின் தலைவன் சந்துருவை, ஏற்கனவே செய்த கொலையின் பழிக்கு பழியாக அவன் தலையை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


-ஈஷா 


Comments