என்னதான் ஜோதிகாவின் பிரச்சனை

        -MMH


பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் தன் தஞ்சாவூர் பட ஷூட்டிங் அனுபவம் குறித்து ஜோதிகா பேசினார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அந்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பேசிய ஜோதிகாவின் பேச்சுக்கு பலபேர் கண்டனம் தெரிவித்தனர் பல பேர் ஆதரவு தெரிவித்தனர் இந் நிலையில் அப்படி என்னதான் ஜோதிகா பேசினார் பார்ப்போம்.



ஜோதிகா 


தஞ்சைப் பெரிய கோயில் மிகவும் புகழ்பெற்றது அழகாக இருக்கும், அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். நானும் பார்த்திருக்கிறேன். மிகவும் அழகாக இருந்தது. அதை அருமையாகப் பராமரித்து வருகிறார்கள். மறுநாள் என்னுடைய படப்பிடிப்பு மருத்துவமனையில் நடந்தது. அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் கண்டதை வாயால் கூற முடியாது, அவ்வளவு மோசமாக இருந்தது. எல்லோருக்கும் ஒரு கோரிக்கை. கோயிலுக்காக அதிக காசு கொடுக்கிறீர்கள் வண்ணம் பூசிப் பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையைப் பள்ளிகளுக்கும் கொடுங்கள். மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். மருத்துவமனையில் நான் அந்தக் காட்சியைக் கண்டதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. மருத்துவமனைகளும் பள்ளிகளும் மிக முக்கியம். தயவுசெய்து அவற்றுக்கு நிதியுதவி கொடுங்கள் என்று இவ்வாறு பேசினார்.


இப்போது


இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது சமூக வலைதளங்களில் ஜோதிகாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக கண்டனங்கள் வலுத்து வருகிறது அவருடைய கருத்தில் என்ன ஒரு தலை பட்சம் இருக்கிறதென்று சமூக நடுநிலைவாதி களுக்கு தெரியவில்லை என்பது உண்மை இதுபோன்ற கருத்துக்கள் பலபேர் முன்வைத்த போதும் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத ஜோதிகாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் ஏன் அவர்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற கேள்வி சமூக நடு நிலை வாதிகளிடம் எழுகிறது.


 


-ஒரு கோவில் கட்டினால் அங்கு 1000 பிச்சைக்காரர்கள் உருவாவார்கள் அதேசமயம் ஒரு பள்ளிக்கூடம் கட்டினால் 1000 அறிவாளிகள் உருவாவார்கள் டாக்டர் அம்பேத்காரின் பதிவு.


-முதலில் மக்களுக்கு கழிப்பறை பிறகுதான் கோயில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பதிவு.


இந்தநிலையில் ஜோதிகாவின் கணவர் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைவருக்கும் வணக்கம்,


''மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை '' என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா அவர்கள் பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடகங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது. கோவில்களைப்போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை, சிலர் குற்றமாக பார்க்கிறார்கள். இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப்பெரியவர்களே சொல்லி இருக்கிறார்கள். மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்குச்செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை. நல்லோர் சிந்தனைகளை படிக்காத காதுகொடுத்துசிந்தனை. நல்லோர் சிந்தனைகளை கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.


பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர். “கொரோனா தொற்று” காரணமாக இயல்பு வாழ்க்கைப்பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும் எங்களுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்தது. அறிஞர்கள், ஆன்மீகப்பெரியவர்களின் எண்ணங்களை பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக்கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம். மதங்களை கடந்து மனிதமே முக்கியம் என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித்தர விரும்புகிறோம்.


தவறான நோக்கத்தோடு, தரக்குறைவாகசிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம், நல்லோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் எங்களுக்கு துணை நிற்கிறார்கள். ஊடகங்கள் சரியான விதத்தில் இச்சர்ச்சையைக்கையாண்டன. நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச் செய்கிறார்கள். எங்களுக்கு உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள் அன்புடன் சூர்யா.


தனி மனித ஒழுக்கமே உலக அமைதிக்கு வழி அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் கருத்து சுதந்திரம் என்பது இருக்கு அந்த வகையில்தான் இந்த பதிவும் இருக்கிறது என்கிறார்கள் சமூக நடுநிலைவாதிகள் ஜோதிகா பேசும்போது, தமிழர்களுக்கு எதிராகவும் இந்துக்களுக்கு எதிராகவும் பேசவில்லை .. உண்டியலில் போடும் பணத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்குப் பயன்படும் ஆஸ்பத்திரிக்கும், ஸ்கூலுக்கும் செலவிடுங்கள் என்பதுதான் அவர் சொல்ல வந்த கருத்தே தவிர, கோயில்களில் பணத்தை போடவே கூடாது என்று சொல்லவில்லை... குறிப்பாக தஞ்சை கோயிலை பற்றி அவதூறாக, அவமரியாதையாக பேசவே இல்லை என்பதே நிதர்சனம். எனினும் ஒரு சாரார் ஜோதிகா பேச்சினால் மனம் புண்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


-சுரேஷ்குமார் பொள்ளாச்சி.



Comments