கழிவறைக்குள் சென்றவர் பலியானார்

     -MMH


          கோவையில் கழிவறைக்கு சென்ற தந்தையும், இளைய மகனும் மயங்கி விழுந்த நிலையில், தேடிச் சென்று மயங்கி விழுந்த மூத்த மகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை பீளமேடு ஹட்கோ வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஸ்ரீதர். 72 வயதான இவர் தனது மனைவி பத்மாவதி (55 ) மகன்கள் பாலாஜி 49), முரளி( 45) ஆகியோருடன் வசித்து வருகின்றார். மகன்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.


இந்நிலையில் அதிகாலை 2.30 மணியளவில் உறங்கி கொண்டிருந்த ஸ்ரீதர் எழுந்து கழிவறைக்கு சென்றுள்ளார். சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், அவரது இளைய மகன் முரளி தந்தையை தேடி சென்றுள்ளார். அவரும் திரும்ப வராததால் மூத்த மகன் பாலாஜி இருவரையும் பார்க்கச் சென்றுள்ளார். மூவரையும் காணாததால் தேடிப் பார்த்த தாய் பத்மாவதி, மூவரும் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து, செல்போன் மூலமாக அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார்.



விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் மூவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மூவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் மூத்த மகன் பாலாஜி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மற்ற இருவருக்கும் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீட்டுக் கழிவறையிலிருந்து விஷவாயு வெளியேறியதாகவும், அதனை சுவாசித்ததாலேயே மூவரும் மயக்கமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மனிதர்களின் உயிரை காவு வாங்குமளவிற்கு இந்த விஷவாய்வின் தாக்கம் இருக்குமா எது எப்படியோ....? இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவையில் விஷவாயு தாக்கி தந்தை உயிரிழந்த நிலையில், அவரை மீட்கச்சென்ற 2 மகன்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கழிவறையில் இருந்து விஷவாயு வெளியேறியதா அல்லது கழிவறையின் அருகில் உள்ள ஜெனரேட்டர் அறையில் இருந்து விஷவாயு கழிவறைக்குள் வந்துள்ளதா என்பது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Comments