கோவையில் கொரோனா பாதித்தவர்கள் டாட்டா

-MMH


கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவை சேர்ந்து 19 பேர் திருப்பூரைச் சேர்ந்த 18 பேர் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என ஒன்றரை வயது குழந்தை உட்பட 38 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.


கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் வைரஸ் தொற்று காரணமாக கோவை திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 260 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் கோவை மாவட்டத்தில் மட்டும் இன்று 7 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மொத்தம் கோவை மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது மேலும் இதில் நேற்றுவரை கோவை மாவட்டத்தில் மட்டும் 95 பேர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தனர். மேலும் இன்று கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 19 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் இதனால் கோவை மாவட்டத்தில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது மேலும் தற்போது இஎஸ்ஐ மருத்துவமனையில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 21 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இந்த நிலையில் இன்று கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒன்றரை வயது குழந்தை உள்பட கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 38 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் காவல்துறை அதிகாரிகள் மருத்துவர்கள் மருத்துவ ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு குணமடைந்தவர்களுக்கு  பலங்களை கொடுத்து கைகளைத் தட்டி அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர் மேலும் தங்களுக்கு தேவையான அனைத்து விதமான வசதிகளும் செய்து கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினர். தொடர்ந்து அமைச்சர் எஸ் பி வேலுமணி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களிடம் உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தொடர்ந்து செய்து கொடுக்கப்படும் எந்த வகையான உதவிகள் தேவைப்பட்டாலும்  உடனடியாக மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து  பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.  


கோவையைச் சேர்ந்த 5 ஆண்கள் 9 பெண்கள் ஐந்து குழந்தைகள் என 19 பேரும், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10 ஆண்கள் 8 பெண்கள் என 18 பேரும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆண் என 38 பேர் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார் அவர்கள் அனைவரும் தொடர்ந்து 14 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளனர்.


-போத்தனுர், சீனி .


Comments