போத்தனுர் மக்களே உஷார் கழுகுப்பார்வையில் போலீஸ்

-MMH    


வெட்டியாக சுற்று வோறை பிடிக்க போத்தனுர் போலீஸ் ரெடி 


கடமைக்கு பரிசு.......! காவலர்களையும் விட்டு வைக்காத கொடும்பாவி கொரோனா........! "வெளியே வராதீங்க மக்களே!" என்று அல்லும் பகலும் உயிர்க்கொல்லித் தொற்றிலிருந்து மக்களைக் காக்க பாடுபடும் காவலர்களுக்குப் பரிசாக "கொரோனா தொற்று உறுதி" என்று செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.


கோவை போத்தனூர்,குனியமுத்தூர் காவலர்கள் 70 பேருக்கு நேற்று மாலை கொரோனா தொற்று கண்டறியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இன்று ஆய்வு முடிவுகள் வெளியான நிலையில் போத்தனூர் காவல் நிலைய காவலர்கள் மூவர், குனியமுத்தூர் காவல் நிலைய காவலர்கள் இருவர் என ஐந்து காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.


இதில் அதிர்ச்சி அடைந்து உடனடியாக போத்தனூர் காவல் நிலையத்தை தற்காலிகமாக மூட உத்தரவிட்டதுடன், ஊரடங்கு தடையுத்தரவை மீறும் விஷமிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை இன்னும் கடுமையாக்கப்படும் என்றும் தொடர்ந்து ,... தற்போது விதிமீறி வீதியில் உலாவும் நபர்களைக் கண்டறிய இரண்டு ட்ரோன்கள் மட்டுமே உள்ளது. மேலும் மூன்று ட்ரோன்கள் வாங்குவதன் மூலம் சிட்கோ , LIC காலனி, சுந்தராபுரம், சாராதமில் ரோடு, போத்தனூர் மெயின் ரோடு, கோணவாய்க்கால்பாளையம், ஈஸ்வரன் நகர், மேட்டூர் உள்ளிட்ட போத்தனூர் பகுதி முழுதும் பார்வையிட்டு அவசியமின்றி வெளியே வருபவர்களைக் கண்டறிந்து, அவர்கள் இருக்கும் இடத்திற்கே உடனடியாகச் சென்று அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போத்தனூர் காவல்நிலைய ஆய்வாளர் திரு.மகேஸ்வரன் கூறினர்.



குறிப்பாக இன்றுமுதல்: ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் செயல்படக்கூடிய நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், தொற்று  நோய் தடுப்புச் சட்டம், தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இவை சாதாரணமான பிரிவுகள் அல்ல மாறாக . குற்றவியல் வழக்கின்கீழ் வருவதால், இதில் குற்றவாளியாக சேர்க்கப்படும் நபர்களால் வழக்கு முடியும் வரை அரசு வேலைக்குச் செல்ல முடியாது. பாஸ்போர்ட் பெற முடியாது. கல்வி, தொழில், மருத்துவத்துக்காக வெளிநாடும் செல்ல முடியாது. அதேபோல தற்போது தனியார் நிறுவனங்களில் கூட காவல்துறையினரின் விசாரணை அறிக்கை பெற்ற பிறகே பணிக்கு அமர்த்துவதால், இவ்வழக்கில் சிக்குவோரால் முன்னணி தனியார் நிறுவனங்களிலும் வேலைக்கு சேர முடியாது. எனவே இளைஞர்களும், பொதுமக்களும் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வந்து வழக்கில் சிக்கி வாழ்க்கையைத் தொலைக்க வேண்டாம்,ட்ரோன் கேமராக்கள் மூலம் தெருக்கள் மற்றும் மக்கள் அடர்த்ததியாக வாழும் பகுதிகள் கண்காணிக்கபடும். 


" எனவே போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி வாழ் மக்கள் அரசு உத்தரவுப்படி வீட்டிலேயே இருந்து நோய்த் தொற்றிலிருந்தும், விதிமீறல் தண்டனையிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அறிவுறுத்தப் படுகின்றனர்.


விழிப்புணர்வுக்காய் , Ln. இந்திராதேவி முருகேசன், கோவை.




 


Comments