சித்தர் பாபுஜி சுவாமிகள் தமிழக அரசுக்கு நன்றி

     -MMH


      நிலவேம்பு கசாயத்திற்கு அங்கீகாரம் அளித்த முதலமைச்சருக்கு நன்றி கொரானா நோயைத் தடுக்க நிலவேம்பு கசாயத்திற்கு அங்கீகாரம் அளித்த தமிழக அரசுக்கு நாகசக்தி அம்மன் பீடம் மற்றும் மூலிகை ஆராய்ச்சி நிலையம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள ஸ்ரீ நாகசக்தி அம்மன் பீடம் மற்றும் மூலிகை ஆராய்ச்சி நிலையம் சார்பில் கொராணா வைரஸை தடுப்பதற்கான நிலவேம்பு கசாயம் எப் 2 கே மற்றும் கபசுர குடிநீர் மூலிகை சித்தர் சிவ சண்முகசுந்தர பாபுஜி சுவாமிகள் தலைமையில் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காவல்துறையினர் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளில் ஈடுபடக் கூடிய அனைத்து தரப்பினருக்கும் நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கலாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலராஜேஷ் அறிக்கை விட்டிருந்தார். அதனடிப்படையில் நிலவேம்பு கசாயத்திற்கு தமிழக அரசு சார்பில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.



இதற்கு நாகசக்தி அம்மன் சக்தி பீடம் மற்றும் மூலிகை ஆராய்ச்சி நிலையம் சார்பில் சித்தர் பாபுஜி சாமிகள் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர்க்கு நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப் பட்டுள்ளதாக கூறினார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பலருக்கு கடந்த முப்பது நாட்களுக்கும் மேலாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். கொரானா வைரஸை தடுப்பதற்கான இம்முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் பழனிச்சாமி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.


தகவல் :  சித்தர் பாபுஜி சுவாமிகள் - ஸ்ரீ நாகசக்தி அம்மன் சக்தி பீடம் மற்றும் மூலிகை ஆராய்ச்சி நிலையம்.


-செய்தி,புகைப்படம்:- போத்தனுர் சீனி  


Comments