ஐந்தாம் கட்ட ஊரடங்கில் எதற்கு எல்லாம் தளர்வுகள்

       -MMH


தமிழகத்தில் பொது பேருந்து போக்குவரத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மாநிலம் 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது.1.0| ஜூன் 30 வரை லாக்டவுன் நீட்டிப்பு. மத்திய அரசு உத்தரவு நோய் கட்டுப்பாடு பகுதிகளில் இந்தியா முழுவதும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருந்தது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.


மேலும் தமிழகத்தில் ஊரடங்கிற்கான புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்தை ஜூன் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநிலம் கீழ்கண்ட 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது. போக்குவரத்திற்காக தமிழகத்தை, எட்டாக பிரித்த அரசு.


மண்டலம் 1- கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்.


மண்டலம் 2- தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி.


மண்டலம் 3- விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி.


மண்டலம் 4- நாகை, திருவாரூர், தஞ்சை , திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை.


மண்டலம் 5- திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்.


மண்டலம் 6- தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி.


மண்டலம் 7- காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு.


மண்டலம் 8- சென்னை காவல் எல்லைக்குள்பட்ட பகுதிமண்டலம் 7-இல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னைகாவல் எல்லைக்குள்பட்ட பகுதிகள் தவிர்த்து அனைத்து மண்டலங்களுக்குள் 50 சதவீத பேருந்துகள் மட்டும் இயக்கப்படும்.


மண்டலம் 7, மண்டலம் 8-க்கு உட்பட்ட பகுதிகளில் பொது போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்திற்கு தடை தொடர்கிறது. அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதிக்கப்படுகிறது. பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 60 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். தமிழகத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு. 50 சதவீத பேருந்துகள் இயக்கம். அரசு அறிவிப்பு மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ பாஸ் தேவையில்லை என்ற நிலையில் பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ பாஸ் அவசியமில்லை.


அனுமதிக்கப்பட்ட இனங்களுக்கு தவிர, மண்டலங்களுக்கு இடையேயும் மாநிலங்களுக்கிடையேயுமான பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது. அரசால் தனியாக வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி பொது போக்குவரத்திற்கான பேருந்துகள் இயக்கப்படும். இ பாஸ் முறை அனைத்து வகையான வாகனங்களும் மேற்கண்ட அட்டவணையில் உள்ள மண்டலத்திற்குள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அவைகளுக்கு இ பாஸ் தேவையில்லை. வெளிமாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரவும் மண்டலங்களுக்கிடையே சென்று வரவும் இ பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.


கீழ்காணும் செயல்பாடுகளுக்கு தடைகள் தொடரும் என தமிழக அரசு உத்தரவு :


>வழிபாட்டுத் தலங்கள், மக்கள்வழிபாடு, அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.


>நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு போன்ற சுற்றுலாத்தலங்கள்.


>தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசாட்டுகள்.


>வணிகவளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள்.


>திரைஅரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், மதுக்கூடங்கள், பூங்காக்கள், கடற்கரை சுற்றுலாத் தலங்கள்.


கட்டுப்பாட்டுடன் கூடிய தளர்வுகள் : 


>மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து.


>இறுதி ஊர்வலங்களில் இருபதுநபர்கள் மட்டும்.


>திருமண நிகழ்ச்சியில் ஐம்பது நபர்கள் மட்டும்.


தடைகள் தளர்வு செய்யப்பட்டவைகள் :


<அனைத்து வகையான  வாகனங்களும் அனுமதிக்கப்பட்ட மண்டலங்களுக்குள் இ-பாஸ் இல்லாமல் பயணிக்கலாம். தனியாக பாஸ் பெறவேண்டிய தேவையில்லை.


<அனைத்து விதமான நகை, ஜவுளி ஷோரூம்கள் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கலாம்.


<உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி.


<டாக்ஸி-மூன்று பயணிகள், ஆட்டோ-இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்கலாம்.


பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் மேலும் இரவு ஒம்பது மணிமுதல் காலை ஐந்து மணி வரை வெளியில் செல்லக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


-ஸ்டார் வெங்கட், சுரேஷ்குமார், கிரி.  


Comments