அரசு அலுவலகத்தில் பெண்ணை, கட்டிப்பிடித்து முத்தமிட்ட அதிகாரி!

                -MMH


அரசு அதிகாரியின் லீலைகள்: 


    ஒரு ஓரமாக இழுத்து சென்று, அந்த பெண்ணை கட்டிப்பிடித்து உதட்டில் முத்தம் தரும் அரசு அதிகாரியின் வீடியோ ஏற்படுத்திய அதிர்வலை இன்னமும் அடங்கவில்லை .துறைவாரியான நடவடிக்கை மட்டுமல்லாமல், இன்னும் தீவிரமான நடவடிக்கை இவர் மீது தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


     அதேபோல, இந்த முத்த காட்சி பரவின உடனேயே, அதிரடி நடவடிக்கை எடுத்த உதவி இயக்குனருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் என்ற பகுதியில் பேரூராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது.. இங்கு வேலை பார்த்து வருபவர் கோபிநாத். இவர் ஒரு அதிகாரி.. முக்கியமான பதவியில் இங்கு உள்ளார். இவருடைய வீடியோதான் ஊரடங்கு தளர்வுக்கு நடுவில் வெளியாகி வைரலானது.       அந்த வீடியோவில் தன்னுடைய ஆபீஸ் ரூமில் கோபிநாத் உட்கார்ந்துள்ளார். அப்போது ஒரு பெண் ஊழியர் அங்கு வருகிறார்.. ரோஸ் கலர் சேலை அணிந்திருக்கிறார்.. தனக்கு பிறந்த நாள் என்று எல்லோருக்கும் ஸ்வீட் தந்து வருகிறார்.. அனைவரும் இனிப்பு எடுத்து கொண்டு, அப்பெண்ணுக்கு வாழ்த்து சொல்கிறார்கள்.      பிறகு அந்த பெண் ஊழியர் கோபிநாத் ரூமுக்குள் சென்று அவருக்கும் இனிப்பு தருகிறார்.அப்போது கோபிநாத் அந்த பெண்ணுடன் சிறிது நேரம் ஏதோ பேசுகிறார். கொஞ்ச நேரம் கழித்து, அந்த ரூமுக்குள் ஒரு ஊழியர் உள்ளே நுழைகிறார்.உடனே அவரை பார்த்ததும் கோபிநாத், ஏதோ வேலை சொல்லி வெளியே அனுப்பிவிடுகிறார்.


            இப்போது அந்த ரூமில் அதிகாரி - பெண் ஊழியர் 2 பேர் மட்டுமே உள்ளனர். இப்போது அந்த பெண் ஊழியர் மறுபடியும் அதிகாரிக்கு இனிப்பு தருகிறார்.அதிகாரியோ, அந்த பெண்ணிற்கு அருகில் சென்று வேக வேகமாக முத்தம் தருகிறார். பிறகு அவசர அவசரமாக வந்து தன் சீட்டில் உட்கார்ந்து கொள்கிறார். இதுதான் அந்த வீடியோ. யார் இந்த காரியத்தை பார்த்தார்கள் என்று தெரியவில்லை. இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பையும் தந்து விட்டது.          இதையடுத்துதான் கோபிநாத்தை விசாரித்து உடனே நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்தன. தற்போது கோபிநாத் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சஸ்பெண்ட் ஆன கோபிநாத், பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்து 2 வருடமாகிறதாம். வீடியோ விவகாரம் வெளியானதும், மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குருராஜன் காதுக்கு கொண்டுபோகப்பட்டுள்ளது.அவர்தான் உடனடியாக வேடசந்தூர் பேரூராட்சி ஆபிஸ் சென்று இந்த வீடியோகுறித்து விசாரணையை தொடங்கி உள்ளார். எல்லா ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியிருக்கிறார்.


      இறுதியாகத்தான், செயல் அலுவலர் கோபிநாத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.வீடியோ பரவின உடனேயே அதிகாரி மீது நடவடிக்கை எடுத்த உதவி இயக்குனர் குருராஜனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


    எனினும் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது என்று தெரிந்தும் கூட, இப்படி பெண்ணை ஒரு ஓரமாக இழுத்து சென்று முத்தம் தருகிறார் என்றால், துறைரீதியாக மட்டுமே நடவடிக்கை எடுக்காமல், இதுபோன்ற ஆட்களை பணிநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


-சுரேஷ்குமார்,துல்கர்னி.


Comments