தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா! நான்கு மாவட்டங்கள் கட்டுப்பாடு எல்லைக்குள்!

           -MMH


தமிழகத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் நீட்டிக்கப்படும் லாக்டவுனின் போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என தெரிகிறது.


எனினும் அரசு அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை . கொரோனாவால் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. 15 நாட்களுக்கு ஒரு முறை என தற்போது 4 ஆவது முறையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அது போல் இறப்பு எண்ணிக்கையிலும் கொரோனா பரவிய சீனாவை காட்டிலும் இந்தியாவில் அதிக அளவில் உள்ளது.மாவட்டங்களிடையே பஸ் போக்குவரத்து.கலெக்டர்கள் யோசனை. மருத்துவ குழுவுடன் முதல்வர் மீண்டும் ஆலோசனை லாக்டவுன்குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழகம் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அதிக எண்ணிக்கையுடன் கொரோனா நோயாளிகள் தினமும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.


இந்த நிலையில் நாளையுடன் முடிவடையும் லாக்டவுனை மேலும் நீட்டிக்க மத்திய அரசிடம் மருத்துவ வல்லுநர்களும், மாநில அரசுகளும் கோரிக்கை விடுத்துள்ளன. முதல்வர் எடப்பாடி இதுகுறித்து இன்று மத்திய அரசு வழிமுறைகளை வெளியிடும் என தெரிகிறது. அது போல் தமிழகத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 20 ஆயிரம் பேரில் 13 ஆயிரம் பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.


தமிழகத்தில் லாக்டவுனை நீட்டிக்க மருத்துவ குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார். கட்டுப்பாடுகள் இந்த நிலையில் இந்தியா முழுவதும் லாக்டவுன் சாத்தியமில்லாதது என்பதால் கொரோனா பாதித்த இடங்களில் மட்டும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதன்படி லாக்டவுன் நீடிக்கப்பட்டால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மும்பை, டெல்லி, தாணே, அகமதாபாத், புணே, ஹைதராபாத், கொல்கத்தா, இந்தூர், ஜெய்ப்பூர், ஜோத்பூர் ஆகிய 13 இடங்களில் கடும் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்படும் என தெரிகிறது.


செங்கல்பட்டு சென்னையில் கொரோனாவால் 13,362 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலியானோர் எண்ணிக்கை 109 ஆக உள்ளது. அது போல் செங்கல்பட்டில் 1000 பேருக்கும், திருவள்ளூரில் 877 பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. இதனால் இந்த 3 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க பரிந்துரைக்கப்படலாம் என தெரிகிறது. அதிகாரப்பூர்வம்லாக்டவுன் 5.0 குறித்து தமிழக அரசோ மத்திய அரசோ இதுவரை எந்த தகவலையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை . அவ்வாறு அறிவிக்கப்பட்டால் மட்டுமே தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்கள் மட்டும் தானா இல்லை வேறு சில மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்குமா என்பது தெரியவரும்.


-ஸ்டார் வெங்கட், சுரேஷ்குமார்.


Comments