திமுக சார்பில் 8 கோரிக்கைகள் முன்.!

          -MMH


தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் திமுக சார்பில் 8 கோரிக்கைகள் முன் வைக்கப்படுகிறது.


1,வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அடித்தட்டு மக்களுக்கும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் உயிரூட்டும் வகையில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 5000 ரூபாய் நேரடியாகப் பண உதவி வழங்கிட வேண்டும்.


2,ஊரடங்கு கால மின்கட்டணத்தினை - ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி உடனடியாக குறைத்திட வேண்டும். 3,நியாயவிலை கடைகள் மூலம் அனைவருக்கும் விலையில்லா முகக்கவசங்களை அளித்திட வேண்டும்.


3,பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் மற்றும் பிற வருடங்களின் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து அவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்.


4,மருத்துவர், செவிலியர், சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்து கொரோனா போர் வீரர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களை அளித்திட வேண்டும்.


5,கொரோனா நோய்ப் பாதிப்புக்குள்ளான பணியாளர்கள் அனைவருக்கும் அரசு அறிவித்த நிதியை உடனே வழங்கிட வேண்டும்.


6,கொரோனா சோதனை குறித்த விவரங்களை மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட வாரியாக வழங்கிட வேண்டும்.


7,கொரோனா சமூகப் பரவல் ஆகிவிட்டதா இல்லையா என்பது பற்றி, தெளிவான அறிக்கை பெற தொற்று நோய் மருத்துவ நிபுணர்கள் கொண்ட தனிக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும்.


8 ,என தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் 8 ஆலோசனைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


-பொள்ளாச்சி M சுரேஷ் குமார்.


Comments