கொரோனா பாதித்த பெண் பிரசவித்து-செவிலியர் தாய்ப்பால்..!

         -MMH


வெஸ்ட் பெங்காலில் ஒரு மருத்துவமனையில் பெண் பிரசவ வேதனையில் வந்து சேருகிறார் அவருக்கு அனைத்து பரிசோதனையும் செய்த மருத்துவமனை அந்தப் பெண்ணிற்கு நல்ல முறையில் பிரசவம் பார்க்கப்பட்டது பிரசவத்திற்கு பின் தாயின் உடலை பரிசோதனை செய்த போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது தாயை கொரோனோ வார்டில் தனிமை படுத்தினர் பிறந்த சில மணி நேரங்களே ஆன குழந்தை தாய் முகம் பார்க்காமல் தனித்து குழந்தைகளுக்கு உண்டான NICU வார்டில் பாதுகாப்பாக இருக்க ஏற்பாடு செய்யப்பட்டது.



குழந்தைக்கு தாய்ப்பால் ஏதும் கொடுக்காமல் இருப்பது அங்குள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் உமா என்பவர் குழந்தையை பார்க்கும் போதெல்லாம் மிகவும் வேதனைப்பட்டார் உமா அவர்களுக்கு வீட்டில் கைக்குழந்தை உள்ளது எனவே நாம் ஏன் இந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடாது என்று எண்ணி அக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து வந்தார் மருத்துவமனைகளில் ஏதாவது ஒரு பிரச்சனையில் குழந்தைகள் தனிமைப்படுத்தப்படும் போது அக்குழந்தைகளுக்கு மருத்துவமனையில் புட்டிப்பால் தான் கொடுப்பார்கள் ஆனால் செவிலியர் உமா குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தார் அச்சமயம் அவரின் கணவர் போன் மூலம் அவரிடம் பேசியபோது உமா இச்சம்பவத்தை கூறியுள்ளார் கணவரும் மனைவியை மனமாரப் பாராட்டி உள்ளர்.



அக்குழந்தையின் தாய் கொரோனோ நோயிலிருந்து திரும்பும் வரை அக்குழந்தைக்கு நீ தாயாக இருந்து கவனித்துக் கொள் என்று பாசத்துடன் கூறியுள்ளார் இதை அறிந்த மருத்துவமனையில் உள்ளவர்கள் உமாவை பாராட்டி வருகிறார்கள். கொரோனோ அச்சம் இருப்பினும் பணியாற்றும் செவிலியருக்கு 100% நோய்தொற்று ஏற்படும் என்று தெரிந்தும் மருத்துவமனையில் செவிலியர்கள் மருத்துவமனையில் தியாகத்துடன் பணியாற்றி வருகிறார்கள் எட்டு மணி நேரம் வேலை என்றாலும் அந்த எட்டு மணி நேரமும் கொரோனா தொற்று உடைய நோயாளியுடன் அவர்கள் கூடவே இருப்பவர்கள் செவிலியர்கள் ஆனால் மருத்துவர்கள் நோய்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்கும்படி செவிலியரிடம் கூறிவிட்டு சென்று விடுவார்கள் இதனால் செவிலியர்களின் சேவை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது


அந்தவகையில் உமாவின் சேவை மகத்தானது நாளைய வரலாறு பத்திரிக்கையின் சார்பாக ஒரு சல்யூட்.


-பீர் முஹம்மது திருப்பூர்.


Comments