தமிழகம்TOகேரளம் செல்ல இ-பாஸ் இல்லாமல் புது ரூட்! கண்டு கொள்ளாத காவல் துறை..!

     -MMH


தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாவட்டம் தாண்டி மாவட்டம் செல்லகட்டாயம் இ பாஸ் தேவை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது ஆனால் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இ பாஸ் தேவையில்லை என்பதை உறுதி செய்யும் விதமாக தமிழக கேரள எல்லைப் பகுதியான மீனாட்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அளவுக்கு அதிகமான ஷார்ட்கட் ரோடுகள் உள்ளன இந்த ரோடுகளை நல்லதுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கும் மக்களுக்கு இடையூறாக சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் இ பாஸ் இல்லாமல் தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் சென்று வருவோர் என அதிகளவில் இந்த ஷார்ட் கட் ரோடுகளை பயன்படுத்துகின்றனர்.



இதனால் நோய் தொற்று வேகமாக பரவ அதிக வாய்ப்பு இருப்பதாகவும் மீனாட்சிபுரம் பகுதியில் மக்கள் அச்சமடைந்துள்ளனர் மேலும் டாஸ்மார்க் கடை அருகில் உள்ளதால் தமிழக மது பிரியர்களும் கேரள மது பிரியர்களு ஒரே இடத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முகக் கவசம் அணியாமலும் அங்கு சென்று வருவதால் நோய் தொற்று இன்னும் வேகமாக பரவ அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.


முகக் கவசம் அணிவோம் சமூக இடைவெளியை கடைபிடிப்போம் என்ற சிந்தனையோடு,


-பொள்ளாச்சி M. சுரேஷ் குமார்.


Comments