போலி பத்திரிக்கையாளர்களை களைய- மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

       -MMH


கோவை மாவட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் என்ற போர்வையில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எமது சங்கத்திற்கு ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன இந்நிலையில் அவர்களின் எதிர்காலம் மற்றும் தொழில் பாதுகாப்பு கருதி இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்க தயங்குவதால் உண்மையான பத்திரிக்கையாளர்களை காக்கும் பொருட்டு தமிழ்நாடு பிரஸ் எம்பிளாய்ஸ் யூனியன் இந்தக் கோரிக்கையை மனுவாய் அளிக்கிறது பல்வேறு சமயங்களில் இது குறித்து நேரடியாக வந்த புகார்களின் அடிப்படையில் கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்ததற்கு தமிழ்நாடு பிரஸ் எம்பிளாய்ஸ் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.


இருப்பினும் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் நாளுக்குநாள் புற்றீசல்  போல் பத்திரிக்கையாளர்கள் என்ற போர்வையில் சுற்றிவரும் போலிகள் அதிகரித்து வருகின்றனர் இது போன்ற போலிகளை களைய ஆண்டு தோறும் மாவட்ட நிருபர்கள் குறித்து அந்தந்த பத்திரிக்கை மற்றும் ஊடக நிறுவனங்களிடம் அங்கீகார கடிதம் பெறுவது போல தாலுக்கா நிருபர்கள் சிறப்பு செய்தியாளர் குறித்த விவரங்கள் குறித்தும் கடிதம் பெற வேண்டும் என்றும் அவர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.


மேலும் இந்த கொரோனா காலகட்டத்திலும் வெளிவராத பத்திரிகைகளில் பெயரை சொல்லிக்கொண்டும் கோவை மாவட்ட செய்திகள் எதுவும் வெளியிடாத பத்திரிக்கைகளின் பெயரை கூறிக்கொண்டும் அரசு அலுவலகங்களில் பலர் சுற்றி திரிகின்றனர் இவர்களின் சிலர் அங்கு வரும் பொதுமக்களிடம் செய்தி வெளியிடுவதாகவும் அரசு அலுவலகங்களில் காரியம் செய்து கொடுப்பதாகவும் கூறி பொதுமக்களிடம் பணம் பறிப்பதாக கூறப்படுகிறது இத்தகைய நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உண்மையான பத்திரிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு பிரஸ் எம்ப்ளாயீஸ் யூனியன் கேட்டுக்கொள்கிறது.


-ஸ்டார் வெங்கட்,சுரேஷ்குமார். 


Comments