பொள்ளாச்சி சார்ஆட்சியர் உத்தரவு சமூக இடைவெளியை பின்பற்றா விட்டால் கடைகளுக்கு சீல்..!

       -MMH


தமிழகத்தில் கொரோனோ நோய்தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது அதை கட்டுப் படுத்தும் விதமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா பரவாமல் தடுக்க கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.


முகக்கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது என்றும் இரண்டு மீட்டர் சமூக இடைவெளி கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் முகக்கவசம் அணியாமல் வந்தால் ரூபாய் 100 முதல் ரூபாய் 1000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் சமூக இடைவெளி பின்பற்றாவிட்டால் கடைகளுக்கு ரூபாய் 1000 முதல் ரூபாய் 10 ஆயிரம் வரையும் அபராதம் விதிக்கப்படுவதுடன், கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து உங்கள் ஊருக்கு வருவோர் குறித்து உங்கள் பகுதி வி.ஏ.ஓ. மற்றும் ஊராட்சி நிர்வாகத்துக்கு தகவல் அளிக்கலாம் என்றும் அல்லது பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலக சிறப்பு கட்டுப்பாட்டு அறைக்கு 04259 224855 என்ற எண்ணுக்கு தகவல் அளிக்கலாம் என்றும் தகவல் அளிப்போரின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் ஆட்டோக்களில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தீவிரமாக கொரோனா விழிப்புணர்வு நடைபெற்று வருகிறது.


முகக் கவசம் உயிர் கவசம் சமூக இடைவெளியை கடைபிடிப்போம் நோய் தொற்றிலிருந்து விலகிச் செல்வோம் என்ற சிந்தனையோடு,


-பொள்ளாச்சி M சுரேஷ்குமார்.


Comments