வரும்கால தூண்களான மாணவர்களின் எதிர்காலம்..!

        -MMH


தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் துணைத்தலைவர் மாரி குமார் அவர்களின் அறிக்கை:


ககொரோனா நோய்த்தொற்று தற்போது உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மிக அதிக அளவில் பரவி வருகின்றது. தற்போது இந்தியா உலக அளவில் நான்காவது இடத்திலும் அதிலும் நமது மாநிலமான தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது இடத்திலும் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவின் எதிர்கால தூண்களான மாணவர்களின் கல்வியும் எதிர்காலமும் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டமைப்பு காங்கிரஸ் கட்சியின் இணைச் செயலாளர் ருச்சி குப்தா மற்றும் தேசிய தலைவர் நீரஜ் குந்தன் ஆகியோர் தலைமையில் இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தர்களையும் கல்வி சம்பந்தமான அனைத்து அதிகாரிகளையும், மாநில ஆளுநர்களையும் சந்தித்து மனு அளித்து வருகிறார்கள். அதில் சில மாநிலங்கள் இதை ஏற்றுக்கொண்டு தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என்ற நிலைக்கு வந்து அறிவிப்பு வெளியிட்டனர். தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தேர்வு தொடர்பான எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை . இதுதொடர்பாக தேசிய செயலாளர் செல்வி. மம்தா அறிவுரையின் பெயரில்,



தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் கல்வி சம்பந்தமான அரசு அதிகாரிகள் அவர்களை சந்தித்து தேர்வுகளை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற விதத்தில் அறிவிப்பு வெளியிட நாங்கள் முயற்சி செய்து மனு அளிக்க திட்ட மிட்டு வருகிறோம். மாணவர்களின் நலனையும் அவர்களின் மன எண்ணங்களையும் கருதிக்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் தேர்வு ஏதுமின்றி அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று மாணவர் காங்கிரஸ் அமைப்பு சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இது தொடர்பான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை எனில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் அமைப்பு போராட்டத்தில் இறங்கும் என்பதையும் இதன் மூலம் தெரிவிக்கிறோம்.


-சுரேஷ்குமார்,கிரி .


Comments