குற்றவாளிகள் இனி தப்பமுடியாது -விரட்டிப்பிடிக்க ஸ்கூட்டர்!ரயில்வே பாதுகாப்பு படையினர் உற்சாகம் !!

     -MMH


தாம்பரம் ரயில் நிலையத்தில் ரோந்து பணிக்கு செல்ல காவலர்களுக்கு செக்வே ஸ்கூட்டர்:


தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைமேடைகளில் ரயில்வே பாதுகாப்பு படையினர் ரோந்து பணிக்கு செல்ல செக்வே ஸ்கூட்டர் வசதி செய்துத்தரப்பட்டுள்ளது


சைல்ட் ஹெல்ப் லைன் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு செக்வே ஸ்கூட்டர் வாகனம் வழங்கப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சந்தீப், உதவி ஆய்வாளர் தனசேகரன் ஆகியோர் இதை பெற்றுக் கொண்டு தொடங்கி வைத்தனர்.


இதுகுறித்து ரயில்வே பாது காப்புப்படை போலீஸார் கூறும் போது, "இந்த வாகனம் மூலம் ரயில் நிலைய நடைமேடைகளில் சோர்வு இல்லாமல் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட முடியும். பயணிகளிடமிருந்து புகார் வந்தால், ரயில் நிற்கும் பகுதி மற்றும் நடைமேடைக்கு உடனடியாக செல்ல வசதியாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக சென்னையிலிருந்து,


- H.முகமது சைஃபுல்லா.


Comments