இறந்த ராணுவ வீரர்களுக்கு மௌன அஞ்சலி....

          -MMH


இந்தியாவில் லடாக்கில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் சீனா ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள், இந்நிலையில் நாளைய வரலாறு புலனாய்வு இதழின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது இதில் இறந்த ராணுவ வீரர்களுக்கு அவர்களது ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது மேலும் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின் ஆசிரியர் MM.ஹாரூன், வெளியீட்டாளர் A.முகமது இஸ்மாயில், துணை ஆசிரியர் S.வெங்கடேஷ், நிர்வாக குழு உறுப்பினர்கள் ஸ்டார் P.வெங்கடேஷ் , L.திருமால் மற்றும் நிருபர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்துகொண்டனர். மேலும் அனைவரும் கிருமிநாசினி பயன்படுத்தி கொண்டனர்.


-குறிச்சி ஈஷா, பொள்ளாச்சி சுரேஷ், மற்றும் நிருபர் குழு.


Comments