கருணை உள்ளம் கொண்டவர்களுக்கு-கருணை மனு..!

                  -MMH


கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சாமானிய மக்கள் முதல் பணக்காரர்கள் வரை மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள் இதையும் தாண்டி உடல்ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் சொல்லில் அடங்காத அளவிற்கு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் அந்த வகையில்,இந்த பெண்மணி கொரோனா நோய்த்தொற்று ஊரடங்கு காலத்தில் மிகவும் சிரமப்பட்டு வருகிறார் இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு மிகவும் சிரமப்பட்டு இரண்டரை சென்ட் இடம் வாங்கியுள்ளார் இந்த இடத்தில் வீட்டை கட்டுவதற்கு அரசிடமிருந்து 4 லட்ச ரூபாய் பெற்றுள்ளார் இப்பொழுது இவர் வீடு முக்கால் பாகம் முடிவடைந்த நிலையில் மேலும் வேலையை தொடர இந்த ஊரடங்கு காலத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள காரணத்தால்,தொடர முடியாமல் தவித்து வருகிறார் பொதுவாக அனைவருக்கும் இருக்க இடம் உடுக்க உடை உண்ண உணவு அடிப்படைத் தேவைகள் ஆகும் இருக்க இடம் இருந்தும் அதில் வீடு கட்டி குடியேற முடியாமல் தவித்து வரும் இந்த பெண்மணிக்கு கொடை வள்ளல்கள் தானாக முன்வந்து அவருக்கு நிதி உதவி வழங்கி அவருடைய வீட்டை கட்டிமுடிக்க உதவ விரும்பினால் உதவிடலாம், என்ற தகவலை,ஆதரவு அற்றோர் மற்றும் கண்பார்வை தெரியாத மக்களுக்கு,இருக்க இடம்,பசிக்கு சோறு என்ற சேவை செய்து வரும் அப்துல் ஹக்கீம் தத்தமங்கலம்,பாலக்காடு.           தொடர்புக்கு,98098 72752. 


-சுரேஷ்குமார்.
 


Comments