செல்வமும் செல்வாக்கும் -நமக்கு உகந்ததா!

    -MMH


         செல்வமும் செல்வாக்கும் நமக்கு நல்ல பாதுகாப்பு கிடையாது. அவை நொடிப்பொழுதில் அழிந்துபோகும் அதை நாம் மறவாதிருந்தால் நமக்கு குறையொன்றுமில்லை.அந்தவகையில்,


         நீ எதை விதைக்கின்றாயோ அது பிற்காலத்தில் பலமடங்கு பெருகி உன்னையே வந்தடையும். இதுவே இறை தந்த கொடை இதுவே இறை தத்துவம் நீ ஒரு விதையை விதைத்தால் அது பலமடங்கு விதைகளை தருகிறது ஒரு பூ காயாகி கனியாகி விதைகளாகி பல மடங்கு பூக்களை தருகிறது .நீ செய்த வினைகளும் பலமடங்கு பெருகி உன்னிடமே வந்து சேரும் அது நல்வினையானால் செல்வங்களையும் சந்தோஷங்களையும் ,தீவினையானால் துன்பங்களையும் கஷ்டங்களையும் தருகிறது. ஆகையால் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்கு நாமே காரணமாகி விடுகிறோம்." நன்றும் தீதும் பிறர் தர வாரா" ஔவையார் பாட்டியார் அருளிய ஆத்திசூடி. ஆகையால் நல்ல செயல்களையே செய்வோம் நல்லதே நடக்கும் இது சத்தியமான உண்மை.


நாளைய வரலாறு ஆன்மீக செய்திக்காக,


- திருமதி S.சுகன்யா சுரேஷ்,முத்துசாமிபுதூர்.


Comments