மாட்டு வியாபார சந்தையில் கவன குறைவு-நோய் பரவுமா என்ற அச்சம்.!

          -MMH


பொள்ளாச்சி வட்டம் ஆனைமலை ஒன்றியம் திவான்சாம்புதூர் ஊராட்சியில் ரயில்வே கேட் காவல்துறை சோதனை சாவடி அருகே அமைந்திருக்கும் மாட்டு பேட்டை தமிழகம் முழுவதும் ஊரடங்கு காரணத்தினால் மாட்டுச்சந்தை எங்கும் இயங்கவில்லை ஆனால் திவான்சாம்புதூர் மார்ட்டின் குரூப்பின் மாட்டு பேட்டையில் குறுகிய இடத்தில் அளவுக்கதிகமான மாடுகள் வைத்து மாட்டு வியாபாரம் துவங்கியுள்ளது இதில் பல்வேறு மாவட்டங்களிலும் மாநிலங்களிலிருந்தும் மாடுகள் வரவழைத்து வியாபாரம் நடைபெற்று வருகிறது.



ஆந்திராவில்இருந்து எருமை கன்றுகள் மற்றும் மாடுகளை ஏற்றி கொண்டு கேரளா எல்லை எல்லையில் அமைந்துள்ள மாட்டு பேட்டையில் இறக்கி கேரளாவுக்கு வியாபாரம் செய்கின்றனர் இதனை வாங்குவதற்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தை சார்ந்த வியாபாரிகள் எந்தவித இ பாஸ் வாங்காமலும் மற்றும் முக கவசம் அணியாமலும் கேரள மாநிலம் கொச்சி எர்ணாகுளம், கொல்லம், மலப்புரம், பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகளை வாங்குவதற்கு வியாபாரிகள் வந்து குவிகின்றனர் இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது இதனை அரசாங்கம் எந்தவித தடுப்பு நடவடிக்கையும் எடுக்காமல் அஜாக்கிரதையாக இருக்கின்றனர் இதனால் சமூக ஆர்வலர்கள் அளித்த புகாருக்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை இந்த வியாபாரம் நடக்கும் இடத்தின் அருகில் காவல்துறை சோதனை சாவடி உள்ளது ஆனால் யாரும் அதனை கண்டுகொள்ளவில்லை 100 புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


நாளைய வரலாறு செய்திக்காக பொள்ளாச்சியிலிருந்து,


-M.சுரேஷ்குமார்.


Comments