இன்று வரலட்சுமி நோன்பு கொண்டாடப்பட்டது .!!

   -MMH


       கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மீனாட்சிபுரம் பகுதியில் இன்று வரலட்சுமி நோன்பு கொண்டாடப்பட்டது.


        வரலட்சுமி நோன்பு என்பது: திருமகளான லட்சுமி நம் இல்லத்திற்கு எழுந்தருளி கொலுவிருப்பதால் வரலட்சுமி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆவணி மாதம் பௌர்ணமி நாளுக்கு முந்தையதாக வரும் வெள்ளிக் கிழமையில் தான் இவ்விரத பூஜை அனுசரிக்கப்பட்டு வருகிறது ஆவணி மாதம் பௌர்ணமி அமைவதைப் பொறுத்து ஆடியிலோ ஆவணியிலோ கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இன்றைய தினம் வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


       


 இந்நிலையில் மீனாட்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து வீடுகளை சுத்தம் செய்து அலங்கரித்து நோன்பு கயிறு கட்டி விரதத்தை தொடங்கினார்கள்.


         வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் பெண்கள் தங்களின் வீடுகளில் நேற்றே பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து தயார் படுத்தினர்கள் பூஜை அறையில் இலை கோலம் போட்டு காவியிட்டு ஒரு தட்டில் அட்சதையைப் பரப்பி அம்மனை ஆவாஹனம் செய்யப் போகும் கலசத்தை தயார் செய்து அம்மனை வரவேற்றனர்.


நாளைய  வரலாறு செய்திக்காக,


-M.சுரேஷ் குமார்,பொள்ளாச்சி. 


Comments