சேலம் அரசுப் போக்குவரத்து கழக!-சில ஓட்டுநர்,நடத்துனர்களுக்கு கொரோனா! - கலக்கத்தில் அதிகாரிகள்..!

      -MMH


      சேலம்-அரசு போக்குவரத்து கழக சேலம் மண்டல அதிகாரிகள், டிரைவர், கண்டக்டர்கள் கொரோனா பிடியில் சிக்குவது அதிகரித்து வருவது, ஊழியர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.சேலம் கோட்ட போக்குவரத்து கழக பஸ்கள், செப்.,1 முதல் இயக்கப்பட்டு வருகிறது. பஸ்களில் அரசின் விதிமுறைகள், சரிவர பின்பற்றப்படவில்லை என,  தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டி வந்தன.


  இந்நிலையில், பணிமனை வாரியாக டிரைவர், கண்டக்டர்கள், அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் மெய்யனூர் பணிமனையில் நடத்தப்பட்ட சோதனையில், 17 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. நேற்று முன்தினம், எருமாபாளையம்-1,2 ஆகிய பணிமனைகளில் நடத்தப்பட்ட சோதனையில், 29 பேருக்கு தொற்று உறுதியானது.


    இதில், இரு அதிகாரிகளுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் ராமகிருஷ்ணா சாலையில், கோட்ட தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், நான்கு பேருக்கு தொற்று உறுதியானது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.


-சோலை,சேலம்.


Comments