100 ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்த கில்லாடிகள் கைது !!

     -MMH


     100 ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்த கில்லாடிகள்!!!!! - நூறு ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து வயதான சிறு வியாபாரிகளிடம் புழக்கத்தில் விட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


     தருமபுரி மாவட்டம் தாளநத்தம் பகுதியில் இளைஞர்கள் இரண்டு பேர் 100 ரூபாய் நோட்டுகளை கொடுத்து வயது முதிர்ந்த சிறு வியாபாரிகளிடம் பொருட்களை வாங்கினர். அந்த பணத்தை எண்ணும் போது கலர் ஜெராக்ஸ் போல இருப்பதாக அந்த கடைக்காரருக்கு பட்டது. ஆனால் அதுகுறித்து அவர் ஏதும் கேட்கவில்லை. இளைஞர்கள் இருவரும் சென்றுவிட்டனர்.     அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு இளைஞர்கள் இருவரும் கடையில் பொருட்கள் வாங்க வந்துள்ளனர். அப்போது இருவரையும் கடைக்காரரும்  அப்பகுதி மக்களும் அடையாளம் கண்டு பிடித்தனர். எனவே உடனடியாக இரண்டு இளைஞர்களையும் பிடிக்க கிராம மக்கள் முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் இருவரும் தப்பிவிட்டனர்.


     இதுகுறித்து கடத்தூர் போலீசில் வியாபாரிகள் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறை ஊத்தங்கரை தோரணம்பதியை சேர்ந்த ஆனந்தன், ராஜ்குமார் இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஜெராக்ஸ் மிஷின், கள்ளநோட்டுகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.


-கிரி,கோவை மாவட்டம்.


Comments