நகரும் நியாயவிலைக் கடை திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்!!

     -MMH


     தமிழகத்தில் 3,501 நகரும் நியாயவிலைக் கடைகள் தொடக்கம்!! தமிழகத்தில் 3 ஆயிரத்து 501 நகரும் நியாயவிலை கடை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். 9 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தின் மூலமாக 5 லட்சத்து 36 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைய உள்ளனர். மலைப்பாங்கான பகுதிகள், காட்டுப்பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு இத்திட்டத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து நகரும் நியாயவிலை கடை வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். 


 


-ஸ்டார் வெங்கட்,அருண்குமார்.


------------------------------------------------------------------


அடுத்த செய்தி:-


கோவை,நீலகிரி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!! -வானிலை ஆய்வு மையம் தகவல்!!


   


     கோவை,நீலகிரியில் அதி கனமழைக்கு வாய்ப்பு வடகிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யுமென கூறப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


-அருண்குமார், கோவை மேற்கு.


Comments